2008 ஆம் ஆண்டு மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பெண் சாமியார் ப்ரக்யா சிங் தாகூர் சமர்ப்பித்த ஜாமீன் மனுவை மோகா(MCOCA) நீதிமன்றம் நிராகரித்தது!
2008 ஆம் ஆண்டு மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் ப்ரக்யா சிங் தாகூர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஜாமீன் மனு கோரி வழக்கறிஞர்கள் மோகா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்தார்.
நீதிபதி "காரணங்கள் தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜாமீன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது" என்று ஒற்றைவரி உத்தரவு பிறப்பித்தார்.
முன்னதாக ஜாமீன் மீதான வாதத்தின்போது, "சாத்வி ப்ரக்யா சிங் பல்வேறுவிதமான உடல் மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆகவே அவருக்குச் சிகிட்சைக்காக ஜாமீன் வழங்க வேண்டும்" என ப்ரக்யா சிங் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதற்கு எதிராக, அரசு தரப்பு வழக்கறிஞர், "ப்ரக்யாசிங் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். அவருக்கு எவ்வித உடல், மனநிலை பிரச்சனைகள் இல்லை" என்று வாதிட்டார்.

ப்ரக்யா சிங்கின் சட்ட ஆலோசகர் ராமேஷ்வர் கீதே இது தொடர்பாக தி ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "சாத்வியின் உடல் ஆரோக்கியப் பிரச்சனைக்காக இரண்டு மாத ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தோம். ஆனால் நீதிமன்றம் விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது" என்று கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக