ஜனதா கட்சியின் தலைவரும், அரசியல் கோமாளியுமான சுப்ரமணிய சுவாமி மும்பையை மையமாக கொண்டு செயல்படும் டி.என்.எ ஆங்கில இதழில் முஸ்லிம்களை குறித்து மிக மோசமான கட்டுரையை எழுதி தனது ஹிந்துத்துவ வெறித்தனத்தை வெளிப்படுத்தியிருந்தார். இக்கட்டுரை முஸ்லிம்கள் உள்பட மனித உரிமை அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சுப்ரமணிய சுவாமியின் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் பெரிய அளவிலான சேதம் ஒன்றும் ஏற்படவில்லை என போலீஸ் கூறுகிறது. 15 நபர்கள் சுப்ரமணிய சுவாமியின் வீட்டிற்கு வெளியே திரண்டதாகவும், ஐந்து பேர் வீட்டு காம்பவுண்டிற்குள் நுழைந்து விளக்குகளையும், பூத்தொட்டிகளையும் உடைத்ததாகவும் போலீஸ் கூறியுள்ளது.
சர்ச்சைக்குரிய கட்டுரை எழுதிய சுப்ரமணிய சுவாமிக்கு தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக