தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.8.11

ஈராக்:அமெரிக்காவிற்கு அல் ஸத்ர் எச்சரிக்கை

பாக்தாத்:ஏற்கனவே அறிவித்துள்ள கால வரம்பிற்கும் மேலாக ஈராக்கில் அமெரிக்க ராணுவம் நீடித்தால் தாக்குவோம் என பிரபல ஷியா அறிஞர் முக்ததா அல்ஸத்ர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2011-ஆம் ஆண்டு ஈராக்கிலிருந்து வாபஸ் பெறுவோம் என அறிவித்துவிட்டு ஈராக் ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கிறோம் என்ற பெயரால் சிலரை நிரந்தரமாக நாட்டில் தங்கவைப்பதற்கு திட்டமிடவே ஸத்ரின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது. ஆக்கிரமிப்பு சக்திகளை தங்களது ஆயுதம் எதிர்கொள்ளும் என ஸத்ரை மேற்கோள்காட்டி எ.எஃப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ராணுவத்தை நிரந்தரமாக தங்கவைக்க மாலிகி அரசு விரும்புகிறது. ஆனால், விசாரணையிலிருந்து விடுவிக்க ராணுவ வீரர்களுக்கு ஈராக் பாராளுமன்றம் தூதரக சலுகை அளிக்கவேண்டும் என அமெரிக்க ராணுவ தலைமை தளபதி மைக் முல்லன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுத்தொடர்பான பேச்சுவார்த்தை துவங்கிவிட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஹோஷியார் ஸப்ரி தெரிவித்துள்ளார். அமெரிக்க ராணுவத்தை ஈராக்கில் நிரந்தரமாக தங்க அனுமதிப்பது அரசின் தோல்வியாகும் என ஸத்ர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்: