தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.8.11

ஐரோப்பிய நேரம் மாலை நாலு மணிக்கு லிபிய தொலைக்காட்சி நின்றது.


டென்மார்க் 22.08.2011 திங்கள் இரவு
லிபிய போராளிகள் கடாபியின் பிரச்சார பீரங்கியாக விளங்கிய அல் ஜமாக்கிரியா தொலைக்காட்சி இன்று மாலை 16.00 மணிக்கு தனது சேவையை நிறுத்தியது. போராளிகள் தொலைக்காட்சிக் கட்டிடத்திற்குள் நுழைந்ததும் இந்தச் சேவை நிறுத்தப்பட்டது. சரியாக நாலு மணிக்கு தொலைக்காட்சித் திரைகளில் கறுப்பு நிறம் காணப்பட்டது. அதன் பின்னர் தொலைக்காட்சியின் சின்னம் மட்டும் காணப்பட்டது ஒலி முற்றாக நின்றுவிட்டது.
இது நடந்துகொண்டிருக்க துருக்கிய வெளிநாட்டமைச்சர் அகமட் டாவ்ரொல்கு எடனடியாக பெங்காஸியை சென்றடைந்தார். எதியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா சென்று அங்கிருந்து நேரடியாக பெங்காஸி சென்றடைந்தார். கடாபியின் வீழ்ச்சிக்கான செயற்பாடுகளில் துருக்கி முக்கிய பாத்திரத்தை கடந்த காலங்களில் திரை மறைவில் நடாத்தி வந்துள்ளது. திரிப்போலி வீழ்ந்தமைக்காக உலகத் தலைவர்கள் தங்களுடைய மகிழ்ச்சிகளை தெரிவித்து வருகிறார்கள். கடாபிக்கு தங்குமிடம் வழங்குவேன் என்ற சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஷவின் சத்தம் அடங்கிப் போயுள்ளது. கடாபி கைதானதும் போர்க்குற்ற நீதிமன்றுக்கு போக வேண்டிய நிலை வரும். சிறீலங்கா போல போர்க்குற்ற நீதிமன்றில் பதிவு செய்யாத லிபியத் தலைவரின் மகன் போர்க்குற்ற நீதி மன்று போகப் போவதை கோத்தபாய பார்ப்பது நலம் தரும்.

0 கருத்துகள்: