தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.8.11

கடாபி தற்கொலை செய்யமாட்டார் அரசியல் தஞ்சம் கோரலாம்


டென்மார்க் 22.08.2011 திங்கள் இரவு
தோல்வியின் கடைசிப் படிக்கு வந்துவிட்ட கேணல் கடாபி அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற கேள்விகள் மேலைத்தேய ஊடகங்களில் பரவலாக வெளிவர ஆரம்பித்துவிட்டன. தற்போது இவர் ஹிட்லர் கடைசிகாலத்தில் பங்கரில் இருந்ததைப் போன்ற அவலமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். எல்லாவற்றையும் ஆறு மாத காலத்தில் பறி கொடுத்து அரிச்சந்திரன் போல மயானத்திற்கு
வந்துள்ளார். ஆகவே ஹிட்லர் போல மனைவியுடன் தற்கொலை செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு ஆய்வாளர்கள் இல்லை என்று தெரிவித்துள்ளனர். வெனிசியூலா, சிம்பாப்பே, துருக்கி ஆகிய நாடுகளில் ஏதோ ஒரு நாட்டில் அரசியல் தஞ்சம் கோருவதற்கு முயற்சி எடுப்பார். சர்வாதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை பெற்று எஞ்சிய காலத்தை வாழ்ந்து முடிக்கவே முயற்சிப்பார் என்று ஒரு கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. அப்படிச் செய்தாலும் மேற்கண்ட நாடுகள் அவரை சர்வதேச நீதிமன்றுக்கு ஒப்படைக்காமல் வைத்திருக்க முடியாது. அதேவேனை ருமேனிய சர்வாதிகாரி கயோசிஸ் தானாக சரணடைந்து 1989 ம் ஆண்டு விசாரணையை சந்தித்து மரணமடைந்தது போல ஒரு முடிவை அவர் சந்திக்க நேரிடும என்றே எதிர் பார்க்கப்படுகிறது. ரோம் நகரம் எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போல திரிப்போலி எரியும்போது பிடில் வாசிக்கக் கூடிய கோமாளித்தனமான மூளையுடைவர் கடாபி. அவர் சாகுமளவிற்கு போக மாட்டார். அச்சத்தினால் மற்றவர்களை கொல்லும் உளவியல் நோயாளியான கடாபி தான் தற்கொலை மூலம் மரணமடைய அச்சமடையும் சர்வாதிகாரிகளின் வரிசையிலேயே வருகிறார் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

0 கருத்துகள்: