தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.8.11

சோமாலியா:அபுதாபி தொலைக்காட்சி நடத்திய சிறப்பு நிகழ்ச்சியில் ஒன்றரை மணிநேரத்தில் திரட்டிய நிதி மூன்று கோடியே 30 லட்சம் திர்ஹம்


1229068386
அபுதாபி:சோமாலியா மக்களுக்கு உதவுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக அபுதாபி தொலைக்காட்சி நடத்திய சிறப்பு நிகழ்ச்சியின் இரண்டாவது தினமான வியாழக்கிழமை மூன்று கோடியே 30 லட்சம் திர்ஹம் நிதி திரண்டது. மூன்றாவது நாளான நேற்று இதனைவிட அதிகமான தொகை சேகரிக்கப்பட்டிருக்கும் என கருதப்படுகிறது.துல்லியமான விபரம் கிடைக்கவில்லை.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அனைத்து
மஸ்ஜிதுகளிலும் நேற்றைய ஜும்ஆ உரையில் சோமாலிய மக்களுக்கு உதவுவதற்கான முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது. சோமாலியாவில் துயரத்தை அனுபவிக்கும் மக்களுக்கு உதவுவதற்காக ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் ஸாயித் அல் நஹ்யான் அழைப்பு விடுத்திருந்தார்.
இச்செய்தியை ஜும்ஆ உரையில் குறிப்பிட்ட மஸ்ஜித் இமாம்கள் ’இவ்வுலகில் ஒரு இறைநம்பிக்கையாளனின் துன்பத்தை நீக்கினால் நாளை மறுமைநாளில் அல்லாஹ் அவனுடைய துன்பத்தை நீக்குவான்.ஒரு அடிமை தனது சகோதரனுக்கு உதவும் காலம் வரை அல்லாஹ் அவனுக்கு உதவுவான்’ ஆகிய இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்…) அவர்களின் பொன்மொழிகளை எடுத்துரைத்தனர்.
அதேவேளையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மருத்துவக்குழு சோமாலியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதிக்கு சென்றுள்ளது. அகதிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக பெரும் மருத்துவ வசதிகளுடன் கூடிய மருத்துவ குழு அனுப்பப்பட்டுள்ளது. இக்குழு இங்கு மொபைல்(நடமாடும்) மருத்துவமனையை உருவாக்கும்.சோமாலியா, கென்யா, எத்தியோப்பியா, திபூத்தி ஆகிய நாடுகளைச்சார்ந்த 16 கோடியே 50 லட்சம் பேர் கடுமையான பட்டினியை அனுபவித்துவருவதாகவும் ஆதலால் உதவி நடவடிக்கைகளை வலுப்படுத்துவதாகவும் எமிரேட்ஸ் வேல்ட் ஹியுமானிட்டேரியன் மொபைல் ஹாஸ்பிடலின் சி.இ.ஒ டாக்டர்.ஆதில் அல் ஷம்மரி கூறியுள்ளார்.இவர் ததாப் அகதி முகாமுக்கு சென்று அங்குள்ள சூழல்களையும், மருத்துவ உதவிகளின் தேவைகளையும் புரிந்துக்கொண்டார்.90 ஆயிரம் பேர் தங்கும் வசதி கொண்ட ததாப் முகாமில் தற்போது 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
உலகிலேயே மிகப்பெரிய அகதிமுகாம்தான் ததாப்.நடமாடும் க்ளீனிக்குகள் ஸ்தாபிப்பதற்கான இடம் உள்ளிட்ட விவகாரங்களில் கெனியா அதிகாரிகளுடன் ஐக்கிய அரபு அமீரக குழு இணைந்து செயல்படும்.

0 கருத்துகள்: