நியுயார்க் ஜுன் 30, ‘ஓரினச்சேர்க்கை’ யால் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் மேற்கத்திய நாடுகளில் கடுமையாக பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில்பலவற்றில் கொடுமையான எச்.ஐ. வி கிருமியால் வரும் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களால்ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் இளைஞர் மற்றும் யுவதிகளை கடுமையாக பாதித்து பரவிக் கொண்டிருப்பது சிக்மா எய்ட்ஸ் ஆய்வு குழும ஆய்வுகளின் மூலம்
உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், மட்டும் கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட ஐந்து லட்சத்து ஐம்பத்து ஐயாயிரம் ஓரின சேர்க்கையாளர்கள் எச் ஐ வி / எய்ட்ஸ் நோய் தொற்றுக்கு ஆளாகி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் ஒரு லட்ச்சத்திற்கும் மேற்பட்ட ‘ஓரின சேர்க்கையாளர்கள்’ எய்ட்ஸ் நோய் தோற்றால் இறந்து போனதாக அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள மொத்த எய்ட்ஸ் நோயாளிகளில் 48% சதவீதம் பேர் ‘ஓரினச்சேர்க்கை’ பழக்கத்தால் இந்த நோய்க்கு இலக்காகியுள்ளதாக தெரிகிறது. இதே போன்று இங்கலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ‘ஓரினச்சேர்க்கையால் எய்ட்ஸ் மற்றும் பால்வினை தாக்கியவர்களின் சதவீதம், சாதாரண ஆண் மற்றும் பெண் இடையேயான செக்ஸ் உறவில் இடுபடுபவர்களை விட பல மடங்கு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
அதே வேளை, இவ்வாறான ‘எய்ட்ஸ் மற்றும் பால்வினை’ நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் 53% பேர் 35 வயதுக்கும் குறைவான வயது பிரிவினர் என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மையும் தெரிய வந்துள்ளது. இது போன்ற உலகெங்கும் பல நாடுகளில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு ‘ஓரினச்செர்க்கையால்’ எய்ட்ஸ் பரவும் அபாயத்தை உறுதி செய்துள்ளது.
குறிப்பாக ‘ஓரினச்சேர்க்கையாளர்கள்’ குறிப்பிடத்தக்க அளவில் பெருகிவரும் லத்தின் அமெரிக்காவில், எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளவகளிடையே நடத்தப்பட்ட ஆய்வில் எய்ட்ஸ் நோய் தோற்று குறித்த இதுவரை வெளிவராத அதிர்ச்சிகரமான பல புதியஉண்மைகள் வெளிவந்துள்ளன.
முதலாவதாக, லத்தீன் அமெரிக்காவில் எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் பரவலுக்கு பிரதான காரணமாக ‘ஓரினச்சேர்க்கை’ விளங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லத்தின் அமெரிக்க நாடுகளில் ‘எய்ட்ஸ் நோயால்’ தாக்கப்பட்டவர்களில் 40% பேர் ‘ஓரினச்சேர்க்கை’ மூலமே நேரடியாக எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதை விட மிகவும் மோசமான விடயம் என்னவென்றால், எய்ட்ஸ் பற்றிய சரியான அறிவுள்ள, உயர் கல்வி மற்றும் மருத்துவ துறையில் உள்ள ‘ஓரினச்செர்கையாலர்களிடையே’ நிலவும் ‘எய்ட்ஸ்’ தங்களை தாக்க வாய்ப்பில்லை என்று நிலவும் தவறான நம்பிக்கையாகும்.
இவ்வாறு ‘எய்ட்ஸ்’ தங்களை தாக்க வாய்ப்பில்லை என்று கருதும் ‘உயர் கல்வி, வேலை மற்றும் பொரளாதார’ பிரிவினரிடையே உள்ள ‘ஓரினச்சேர்க்கையில்’ ஈடுபடும் 35% பேருக்கு, எய்ட்ஸ் நோய் தோற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகளில், ‘ஓரினச்சேர்க்கை’ யில் ஈடுபடுவோரிடையே, எய்ட்ஸ், கிளமீடியா, கோனோரியா மற்றும் பிறப்புறுப்பு ஹெர்பிஸ் ஆகிய நோய் பதிப்பு கடந்த பத்து வருடங்களில் 100% க்கும் மேற்பட்ட அளவில் அதிகமாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக