தலிபான் போராலிகளின்தலைவர் முல்லா ஒமர் பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் கொல்லப்பட்டதாக கடந்த மே மாதம் செய்தி வெளியானது. இதை ஆப்கானிஸ்தானில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு தனியார் டெலிவிசன் அறிவித்தது. ஆனால் இந்த தகவலை தலிபான் இயக்கமும்,
பாகிஸ்தானும் மறுத்தன. அவர் குவெட்டா நகரில் தான் தங்கியுள்ளார் என கூறி வந்தனர். ஆனால், அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை திட்டவட்டமாக அறிவித்தது. தற்போது அது உண்மை இல்லை. முல்லா ஒமர் உயிருடன் தான் இருக்கிறார் என தலிபான்களின் செய்தி தொடர்பாளர்கள் முஜாகித், மொகமத் குவாரியூசுப் ஆகியோர் மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளனர். எங்களின் செல்போன்கள், இ-மெயில்கள் மற்றும் இணைய தளங்களை அமெரிக்க உளவுத்துறையினர் ஊடுருவி ஒட்டு கேட்டனர். அதில் மத தலைவர் முல்லா மொகமூத் ஒமர் முஜாகித் மரணம். அவரது ஆன்மாவை இறைவன் ஆசீர்வதிக்கட்டும் என எஸ்.எம்.எஸ். தகவல் இருந்தது. அதை தவறாக நினைத்து முல்லா ஒமர் இறந்து விட்டதாக அமெரிக்க உளவுத்துறையினர் வதந்தியை பரப்பி விட்டனர். உண்மையில் அவர் சாகவில்லை. ஆப்கானிஸ்தானில் உயிருடன் உயிருடன் இருக்கிறார் என தெரிவித்துள்ளனர். இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக