குண்டலினி யோகாசனத்தில் துள்ளி துள்ளி குதித்தபடி ரஞ்சிதா நடனம் ஆடியதை நித்யானந்தா பார்த்து ரசித்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள பிடரியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் ஆண்டு தோறும் குரு பூர்ணிமா விழாவையொட்டி சிறப்பு யாகங்கள் பூஜைகள், குண்டலினி யோகா போன்றவை நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்தாண்டும் பிடரி ஆசிரமத்தில் குரு பூர்ணிமா விழா நேற்று நடந்தது. விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார். பட்டுப்புடவை
அணிந்திருந்த ரஞ்சிதா, நித்யானந்தாவுக்கு பாத பூஜை செய்து அவரது முன் மண்டியிட்டார்.அப்போது, ரஞ்சிதாவின் தலையை தொட்டு ஆசீர்வாதம் வழங்கிய நித்யானந்தா, பின்னர் பெண்கள் அனைவரும் வரிசையில் வந்து அவருக்கு பாதபூஜை செய்து ஆசீர்வாதம் பெற்றனர்.
பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் குண்டலினி யோகாசன பயிற்சி அளித்த நித்யானந்தா முன்பு நடிகை ரஞ்சிதா திடீரென எழுந்து துள்ளி துள்ளி குதித்தபடி ஆனந்த நடனம் ஆடினார்.
அவரைப் போல் ஏராளமான பெண்களும் உற்சாக நடனம் ஆடினர். சில பெண்கள் தரையில் படுத்து உருண்டனர். இதை நித்யானந்தா சிம்மாசனத்தில் அமர்ந்தபடி ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார்.
குண்டலினி யோகாசன பயிற்சி பற்றி நித்யானந்தா கூறுகையில், ஒவ்வொரு மனிதனிடமும் குண்டலினி சக்தி உள்ளது. அதை உயிர்ப்பிப்பதற்காக இந்த யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக