நித்யானந்தா சாமியார் சென்னையில் நேற்றுமுன்தினம் அளித்த பேட்டியில், சன் டி.வி., சன் பிக்சர்ஸ் தலைமை அதிகாரி சக்சேனா, அவருடைய உதவியாளர் அய்யப்பன் ஆகியோர் மீதும்
மற்றும் நக்கீரன் பத்திரிகை மீதும் பரபரப்பான புகார்களை கூறினார். ஆபாச வீடியோ காட்சிகளை தர வேண்டுமானால் ரூ.60 கோடி தர வேண்டும் என்று கேட்டு மிரட்டியதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அவர் சொன்ன புகார் அடிப்படையில், கர்நாடக மாநிலத்தில் பிடதி என்ற இடத்தில் உள்ள நித்யானந்தரின் ஆசிரமத்தைச் சேர்ந்த மேலாளர் நித்ய ஆத்மபிரபானந்தாவும், நித்யானந்தாவின் சீடர்கள் சிலரும் சென்னை போலீஸ் கமிசனர் திரிபாதியிடம் புகார் மனுக்கள் கொடுத்தனர்.இந்த நிலையில், தாங்கள் கைது செய்யப்படக்கூடும் என்பதால் நக்கீரன் ஆசிரியர் கோபால், நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் நேற்று முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி தேவதாஸ் முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக