தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.6.11

கருத்து வேறுபாடுகளை, பேச்சு மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும்: அன்னா ஹசாரே

புதுடெல்லி, ஜூன். 16-  லோக்பால் மசோதா தொடர்பான விவகாரத்தில், மத்திய அமைச்சர்கள் மோதல் போக்கை கடைபிடிக்கக் கூடாது. எங்களுடனான கருத்து வேறுபாடுகளை, பேச்சு மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என,  அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
இதுகுறித்து காந்தியவாதி அன்னா ஹசாரே கூறியதாவது:
லோக்பால் வரைவு மசோதா குழுவின் நான்காவ
து கூட்டம், நாளை (இன்று) நடக்கிறது. இந்த கூட்டத்தில், சமூக ஆர்வலர்கள் தரப்பு பிரதிநிதிகளான நாங்களும் பங்கேற்று, எங்களது கருத்துக்களை தெரிவிப்போம். லோக்பால் வரைவு மசோதா தொடர்பான விவகாரத்தில், எங்களுக்கும், அரசு தரப்பு பிரதிநிதிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இதற்காக எங்களுடன் மோதல் போக்கை, மத்திய அமைச்சர்கள் கடைபிடிக்கக் கூடாது. கருத்து வேறுபாடுகளை, பேச்சு மூலம் தான் தீர்க்க வேண்டும்.
பார்லிமென்ட் உயர்ந்த அமைப்பு என்பதில், எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. என்றாலும், கிராம பார்லிமென்ட் என்பது, டெல்லியில் உள்ள பார்லிமென்டை விட பெரியது. யாரும் இதை நினைத்துப் பார்ப்பது இல்லை. நம்மை பார்லிமென்டுக்கு யார் அனுப்புகிறார்கள் என்பதை, சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.

0 கருத்துகள்: