தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.6.11

சாய்பாபாவின் பிரத்தியேக அறையில் 98 கிலோ தங்கம், ரூ.11.56 கோடி பணம் கண்டுபிடிப்பு


புட்டபார்த்தி பிரசாந்தி ஆசிரமத்தில் உள்ள சத்ய சாய்பாபவின் அறையிலிருந்து, பெருமளவனாக நகை, பணம் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 24ம் திகதி சத்ய சாய்பாபா இறைவனடி சேர்ந்த நிலையில் அவர் வசித்து வந்த புட்டபார்த்தியில் உள்ள பிரத்தியேக இடமான யஷூர்வேதமந்திர் நிலையம் பூட்டப்பட்டது. தற்போது ஒன்றரை மாதங்களுக்கு பிறகு அந்த அறையை, முன்னாள் தலைமை நீதிபதியும், சத்ய சாய் டிரஸ்ட்
உறுப்பினருமான பி.என்.பகவதி, செயலர் சக்ரவர்த்தி சாய்பாபாவின் சீடரும் பாதுகாவலருமான சத்யஜித் உள்ளிட்ட குழுவினர் திறந்து உள்சென்ற போது ஒவ்வொரு அறையிலும் பணமும், நகைகளும் குவியல் குவியலாக இருந்தது தெரியவந்துள்ளது.

சுமார் 98 கி.கி தங்கம், 307 கி.கி வெள்ளி மற்றும் ரூ.11.56 கோடி பணம் என்பன இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதில் தங்கத்தினாலான கிருஷ்ணா ஹனுமான் சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டிள்ளன. கைப்பற்றப்பட்ட பணத்தொகை டேலர் மெஷின் மூலம் எண்ணபப்ட்டு ஒரு சில மணித்தியாலங்களுக்குள் பேங்க் ஆஃப் இந்தியா பிரசாந்தி நிலையம் கிளையில் வைப்பிடப்பட்டுள்ளதாக பாபாவின் உறைவினர் ஆர்.ஜே.ரச்தங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த அறை திறக்கப்பட்ட போது, சுங்கவரித்திணைக்கள அதிகாரிகளும் உடனிருந்தனர். குறித்த யாஹூர் மந்திர் நிலையத்தை சாய்பாபாவின் அருங்காட்சியமாக மாற்றி, எதிர்வரும் ஜூலை 15ம் திகதி முதல் பக்தர்களுக்கு திறந்துவிடப்போவதாகவும், சாய் பாபா பயன்படுத்திய பொருட்கள் இதில் காட்சிக்கு வைக்கப்படும் எனவும் சாய்பாபவின் பக்த நிலையம் அறிவித்துள்ளது.

0 கருத்துகள்: