தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.5.11

ஒசாமா கொல்லப்பட்ட வேளை புகைப்படங்கள் - வெளியிட மறுத்தது அமெரிக்கா; வெளியிட்டது பாகிஸ்தான் (படங்கள்)



அல் - கைதா இயக்கத்தினர், அமெரிக்காவுக்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை முன்னெடுக்க, புகைப்படத்தை விளம்பரமாக பயன்படுத்துவார்கள் என்பதால்,

ஒசாமா கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தும் புகைப்படங்களை வெளியிட போவதில்லை என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்திருந்தார். எனினும் அவருடைய அறிவிப்பு வெளியாகி சில மணி நேரங்களில், பாகிஸ்தான் இராணுவத்தினரால் இப்புகைபப்டங்கள் கசியப்பட்டிருந்தன.
தாக்குதல் நடந்த அதிகாலையில், பாகிஸ்தான் இராணுவத்தால் எடுக்கப்பட்ட இப்புகைப்படங்களில், ஒசாமாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் உட்பட, உதவியாளர்கள் மூன்று பேரின் சடலங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களிடம் எந்தவித ஆயுதங்களும் காணப்படவில்லை.
அதிகாலை, 2.30 மணி, 5.21 மணி, 6.43 மணி நேரங்களில் இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றைவிட குறித்த தாக்குதலின் போது விபத்துக்குள்ளான அமெரிக்க ஹெலிகொப்டர் பற்றிய புகைப்படமும் வெளியாகியுள்ளது.
இச்சடலங்களில் ஒருவருடையது பின்லேடனின் மகன் காலித் (Khalid) எனவும், மற்றைய இருவர்களில் ஒருவர் ஒசாமவின் நம்பிக்கைக்குரிய உதவியாளர், அர்ஷாட் கான் (Arshad Khan) எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

எனினும் இப்புகைப்படங்கள் எவற்றிலும் ஒசாமா பின் லேடனின் உடல் காட்சிப்படுத்தப்படவில்லை.


இப்புகைப்படங்கள் வெளியிடுவதற்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமவை பிரபல CBS செய்தி சேவை பேட்டி எடுத்தது. அதன் போது Steve Kroft கேட்ட கேள்விகளுக்கு ஒசாமா பதில் அளிக்கையில்

கேள்வி : நீங்கள் புகைப்படத்தை பார்த்தீர்களா?

ஒபாமா : ஆம்.

கேள்வி : அவற்றை பார்த்ததும் உங்களது ரியாக்ஷன் என்ன?

ஒபாமா : 'அது ஒசாமாதான்'!

கேள்வி : ஏன் நீங்கள் அதை வெளியிடவில்லை.

ஒபாமா : நாங்கள் எமது உள்விவகார நிபுணர்களிடம் இது பற்றி கலந்துரையாடினோம். இது ஒசாமாதான் என எமக்கு மிக உறுதியாக தெரியும். அவருடைய டீ.என்.ஏ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மிக உறுதியானது.

ஆயினும் ஒருவர் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவதில் வன்முறையை தூண்டிவிடும் செயல் இருக்கிறது.

அமெரிக்கர்களுக்கும், உலக மக்களுக்கும் அவர் இல்லாமல் போன சந்தோஷம் இருக்கிறது. ஆனால் இதற்காக இதை வைத்து காற்பந்து விளையாட முடியாது. அத்தோடு இவற்றை வெளியிடுவதால், தேசிய நலனுக்கு குந்தகம் விளைவிக்கலாம். தீவிரவாத தன்மை விஸ்தாரமடைவதற்கு, இவையும் காரணமாகலாம். இது பற்றி ஹிலாரி கிளிண்டன், பொப் கேட்ஸ் உட்பட எமது அறிவுஜீவிகளுடன் கலந்துரையாடினோம். அவர்களும் எனது முடிவுக்கு சம்மதம் கூறினர்.

கேள்வி : எனினும் பாகிஸ்த்தானில் உள்ல மக்கள் 'இது எல்லாமே பொய். ஒபாமா! இது அமெரிக்காவின் இன்னுமொரு ஏமாற்றுவேலை. ஒசாமா சாகவில்லை' என்கிறார்களே!

பதில் : பின்லேடன் கொல்லப்பட்டு விட்டார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அல் கைதா தலைவர்களுக்கும் இதில் சந்தேகமிருக்காது. எமது அறிவிப்புகு விமர்சனம் வரத்தான் செய்யும். ஆனால், ஒசாமா இந்த பூமியில் நடமாடுவதை, மீண்டும் உங்களால் பார்க்க முடியாது. என்பது தான் நிஜம்!

0 கருத்துகள்: