தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.5.11

ஒசாமா தங்கியிருந்த வீட்டை கட்டியவர் கைது


பாகிஸ்தானில், ஒசாமா பின்லாடன் தங்கியிருந்த வீடு, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தலைவர் பயன்படுத்தி வந்த வீடு என, தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒசாமா பின்லாடன், பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த போது, அமெரிக்க ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். பாகிஸ்தான் ராணுவ மையத்திற்கு அருகே இருந்த அந்த வீட்டை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத் தலைவர் சயித் சலாவுதீன் பயன்படுத்தி வந்தார் என்று, தகவல்கள்
வெளியாகி உள்ளன. இதுகுறித்து, கனடா நாட்டு பத்திரிகை ஒன்றில், பாகிஸ்தான் போலீஸ் அதிகாரிகள் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதில், பின்லாடன் தங்குவதற்கு முன், அந்த வீட்டை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தினர் பயன்படுத்தி வந்துள்ளனர். பின்லாடன் அங்கு தங்கியிருப்பது குறித்து, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கோ, போலீசாருக்கோ தெரியாது. பின்லாடனுக்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் ஆதரவு அளிக்கவில்லை. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக, பாகிஸ்தான் தனக்குத் தெரிந்த தகவல்களை எல்லாம் அமெரிக்காவுக்கு தெரிவித்து வந்தது. பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகே, அந்த வீட்டைப் பற்றி பொதுமக்களுக்கு தெரியவந்துள்ளது. அந்த வீடு, ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்தவருக்குச் சொந்தமானதாக இருக்கலாம். ஆனால், அதன் உரிமையாளர் யார் என்பது குறித்து சரியாக தெரியவில்லை. பத்திரப்பதிவு அலுவலகத்தில், இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அந்த அதிகாரி கூறியதாக, பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒசாமா தங்கியிருந்த வீட்டை கட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒசாமா தங்கியிருந்த வீட்டைக் கட்டிய ஒப்பந்ததாரர் குல் முகமது என்பவரை, பாக்., போலீசார் கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். "பாக்., உடனான உறவு சிக்கல் தான் என்றாலும், முக்கியமானது' என்று, அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கை கூறியுள்ளது. யாருடைய உதவியால், ஆறு ஆண்டுகள் அபோதாபாத்தில் ஒசாமா தங்கியிருந்தார் என்று, அமெரிக்கா தற்போது ஆராய்ந்து வருகிறது.
"ஒசாமா வீடு இருந்த பகுதி வழியாகத் தான் நான் தினமும் ஓட்டப் பயிற்சி மேற்கொள்வேன். அங்கு ஒசாமா இருந்தது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது' என்று, பாக்., முன்னாள் அதிபர் முஷாரப் கூறியுள்ளார். ஒசாமா விவகாரம் குறித்து பாகிஸ்தானிடம், அமெரிக்கா பல கேள்விகளைக் கேட்டு வருவதால், இருதரப்பிலும் பதட்டம் நிலவுவதாக அமெரிக்கப் பத்திரிகைகள் கூறியுள்ளன.

0 கருத்துகள்: