
விக்கிலீக்ஸ் இணைய தளம் அம்பலப்படுத்தி
வரும் ரகசிய கேபிள்களில் இருந்து இந்த தகவலை திரட்டி பிரசுரிப்பதாக இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது, அவதூறானது, கற்பனையானது, தவறான உள்நோக்கம் கொண்டது என தயாநிதி மாறன் தனது நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார். சுய லாப நோக்கங்களுக்காக தனக்கு எதிராக செயல்படும் ஒரு லாபியின் அங்கமாகிவிட்ட இந்து நாளிதழ், சமுதாயத்தில் தனக்கு இருக்கும் மரியாதையையும் நல்ல பெயரையும் கெடுப்பதற்காக திட்டமிட்டு இவ்வாறு ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது என்றும் தயாநிதி கூறியுள்ளார். ‘பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள ஒருவரை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால், அது உண்மையானதுதானா என்று சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரித்து அதன் பின்னர் பிரசுரிப்பதுதான் பத்திரிகை தர்மம்.ஜனநாயகத்தின் நான்காவது தூணாக மதிக்கப்படும் கண்ணியமான எந்த பத்திரிகையும் அதைத்தான் செய்யும். இந்து நாளிதழ் அந்த குறைந்தபட்ச கடமையைக்கூட செய்யத் தவறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது’ என தயாநிதி மாறன் கண்டித்துள்ளார். விற்பனை சரிந்து வருவதை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் சமீபகாலமாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தும் ரகசியங்கள் என்ற பெயரில் ஆதாரமற்ற செய்திகளை மலிவான விளம்பரம் தேடுவதற்காக இந்து நாளிதழ் வெளியிட்டு வருவது கண்கூடாக தெரிகிறது.
அதிகம் விற்பதற்காக ஒழுக்க நியதிகளில் இருந்து இந்து நாளிதழ் தடம் புரண்டு செல்கிறது என்று தயாநிதி மாறன் மேலும் கூறியுள்ளார். மேற்கண்ட செய்திகளை உடனடியாக திரும்பப் பெற்று வருத்தம் தெரிவிப்பதுடன் ஐந்து கோடி ரூபாய் இழப்பீடாக தரவும் இந்து முதன்மை ஆசிரியர் என்.ராமுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவ்வாறு செய்யத் தவறினால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப் போவதாக எச்சரித்துள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக