தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.4.11

குளிர்விக்கும் முயற்சி தோல்வி : அணு உலைகளை அழிக்கப் போவதாக ஜப்பான் அறிவிப்பு?!


ஜப்பானில், பாரிய கதிர்வீச்சு தாக்கத்தை ஏற்படுத்திய, நான்கு அணு உலைகளை குளிர்விக்கும் பணி தோல்வி அடைந்துள்ளதால், அவற்றை அழிக்க முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கடந்த 11ம் திகதி ஜப்பான்
 மியாகி மாநிலத்தில் கடுமையான நிலநடுக்கமும், அதை தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டரில் 9.2 ஆக பதிவாகியிருந்தது. இப்பேரழிவில் சிக்கி 30,000 ற்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
பிகுஷிமா, டச்சி அணு மின் நிலையங்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அணு உலைகளை குளிர்விக்கும் உபகரணங்கள் ஸ்தம்பிதமாகின. இதனை தொடர்ந்து அதிக வெப்பம் காரணமாக இந்த அணு உலைகள் வெடிப்புக்குள்ளாகியதால், அப்பகுதியில் காற்றிலும், கடலிலும் கதிர்வீச்சு பரவத்தொடங்கியதுடன், மக்களின் சுவாசத்திற்கும் கேடுவிளைவிக்க தொடங்கியது.

இதையடுத்து ஜப்பானிய உணவு உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்வதை பல நாடுகளும் மறுக்கத்தொடங்கின. ஜப்பானுக்கு இது பொருளாதார ரீதியில் கடும் பின்னடைவை தந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக போராடியும் 4 அணு உலைகளை குளிர்விக்க முடியவில்லை. இதனால் அவற்றை அழிக்க முடிவு செய்துள்ளதாக இந்த  தொழிற்சாலைகளை இயக்கும் எலக்ட்ரிக் பவர் கம்பெனி தெரிவித்துள்ளது.

மேலும் அணு உலைகளை குளிர்விப்பதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்த டெப்கோ தலைவர் மசடகா ஷிமிசுவும் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டெப்கோ தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்: