தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.4.11

அரசுக்கெதிரான போராட்டத்தில் கொல்லப்பட்டவர்கள் 24 பேர் மட்டுமே – பஹ்ரைன் அரசு


மனாமா:பஹ்ரைனை ஆட்டிப் படைத்த அரசுக்கெதிரான போராட்டத்தில் 24 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக பஹ்ரைன் உள்துறை அமைச்சர் ஷேக் ராஷித் பின் அப்துல்லாஹ் அல் கலீஃபா தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்டவர்களை ராணுவம் கொலைச் செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்த விளக்கத்தை அவர்
அளித்துள்ளார்.
நான்கு போலீஸ்காரர்கள், நிரபராதிகளான ஏழு சிவிலியன்கள், 13 எதிர்ப்பாளர்கள் ஆகியோர் ராணுவ நடவடிக்கையின்போது கொல்லப்பட்டதாக அமைச்சர் தெரிவிக்கிறார்.
391 போலீஸ்காரர்களும், வெளிநாடு மற்றும் உள்நாட்டைச் சார்ந்த 56 பேர் காயமடைந்துள்ளனர்.நான்கு போலீஸ்காரர்கள் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் அமைச்சர் பாராளுமன்ற கூட்டத்தில் தெரிவித்தார்.
பஹ்ரைனின் மிகப்பெரிய மருத்துவமனையான ஸல்மானியா மருத்துவமனை காம்பளக்ஸ் சித்திரவதை முகாமாக மாறியது. தாக்குதல் நடந்த வேளையில் மருத்துவமனையில் நிகழ்ந்த சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு மன்னிப்பு அளிக்கமாட்டோம். பஹ்ரைனில் நடந்த தாக்குதல்களில் வெளிநாட்டு தலையீடு உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
பாரபட்சத்திற்கெதிராகவும்,அரசியல் சீர்திருத்தம் கோரியும் பஹ்ரைனில் எதிர் கட்சியினரும், ஷியாக்களும் நடத்திய போராட்டத்தை அரசு அடக்கி ஒடுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
போராட்டத்திற்கிடையே நடந்த சம்பவங்களைக் குறித்து விசாரணை நடத்தப்பட்டு உடனடியாக அறிக்கை வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: