மனாமா:கடந்த ஒரு மாத காலமாக பஹ்ரைன் நாட்டின் தலைநகரான மனாமாவில் ப்யர்ல் சதுக்கத்தில் முகாமிட்டிருந்த எதிர்ப்பாளர்களை ராணுவம் விரட்டியடித்தது.
இன்று காலை துவங்கிய இந்நடவடிக்கைக்கு பஹ்ரைன் டிஃபன்ஸ் ஃபோர்ஸ் தலைமை வகித்தது. சாலைகளில் தடை ஏற்படுத்தி எதிர்ப்பாளர்களை தனிமைப்படுத்திய பிறகு ப்யர்ல்
சதுக்கத்திலிருந்து அவர்களை விரட்டியது ராணுவம். இரண்டு மணிநேரத்திற்குள் அனைத்து எதிர்ப்பாளர்களும் அப்புறப்படுத்தப்பட்டனர்.பிரதான மருத்துவமனையான ஸல்மானியா மெடிக்கல் காம்பள்க்ஸின் கட்டுப்பாட்டை ராணுவம் கைப்பற்றியது. நேற்று இரவு சிட்ராவில் எதிர்ப்பாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்குமிடையே கடுமையான மோதல் நடந்தது. இதில் எதிர்ப்பாளர்களில் 3 பேரும் போலீஸ்காரர் மூன்று பேரும் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட 3 போலீஸ்காரர்களில் இருவர் எதிர்ப்பாளர்களை விரட்டியடிக்கும் போது வாகனம் மோதி இறந்துள்ளனர். இதர பகுதிகளில் அமைதி நிலவுகிறது.
சிட்ராவில் காயமடைந்த 200க்கும் மேற்பட்டவர்களை நேற்று ஸல்மானியா மருத்துவமனைக்கு கொண்டுவந்துள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
பஹ்ரைனில் இந்தியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கடைகள் திறக்கவில்லை. போராட்டத்தால் பாதிக்கப்பட்ட இதர பகுதிகளில் மக்கள் பயந்துபோய் வாழ்கின்றனர். திறந்திருக்கும் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக