எகிப்தில் அதிபர் பதவி விலக வேண்டுமென மில்லியன் கணக்கானோர் பல நாட்களாக தொடர்ந்து
வீதிகளில் மாபெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களை, எகிப்து அதிபரின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படும் ஆயிரக்கணக்கானோர் திடீரென கூட்டத்தினுள் புகுந்து தாக்குதல் நடத்தியதால் அங்கு கலவரம் ஏற்பட்டதாக தெரியவருகிறது.
இரு தரப்பினரும் கற்களாலும் போத்தல்கள் மற்றும் கையில் அகப்படும் பொருட்களால் தாக்கியவாறு இருந்ததாகவும் இதனால் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
Tahrir Square இற்கு அருகாமையில் மோதல் இடம்பெறுகின்ற இடம் போர்க்களம் போல் காட்சி தருவதாகவும் அங்கிருக்கும் சர்வதேச ஊடகங்களின் நிருபர்கள் வர்ணிக்கின்றனர். Tahrir Square க்கு அருகில் குதிரைகள் ஒட்டகங்களில் வந்த முபாரக் ஆதரவாளர்களே இந்த தாக்குதல்களுக்கு காரணமென தெரியவருகிறது.
இதுவரை 500 மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அத்துடன் அங்கிருந்து செய்தி சேகரித்துவரும் சர்வதேச ஊடக நிருபர்களும் தாக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னர் எகிப்து நாட்டு இராணுவத்தினர் போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. (கலவரம் வீடியோ)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக