தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.12.10

விக்கிலீக்ஸ் விவகாரம்: உலகத் தலைவர்களிடம் வருத்தம் தெரிவித்த ஹிலாரி!


வாஷிங்டன்: விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசியங்கள் தொடர்பாக, 12 நாட்டுத் தலைவர்களிடம் வருத்தம் தெரிவித்தார் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன்.

உலகத் தலைவர்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் அடித்த மட்டமான கமெண்டுகள், ஒவ்வொரு நாட்டு ரகசியங்கள் குறித்தும் தகவல் அமெரிக்க தூதர்கள் வாஷிங்டனுக்கு பரிமாறிய தகவல் போன்றவற்றை அம்பலப்படுத்தி வருகிறது விக்கிலீக்ஸ் இணையதளம்.

இது பல நாட்டுத் தலைவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. உலக நாடுகளுடன் அமெரிக்காவுக்கு உள்ள நட்பு மற்றும் தொடர்புகளையே துண்டித்து விடுமோ எனும் அளவுக்கு படுமோசமான கமெண்டுகள், ரகசியங்கள் அம்பலமாகியுள்ளன.

இதனால் அதிர்ச்சியடைந்துள்ள அமெரிக்கா, உடனடியாக சர்வதேச தலைவர்களைத் தொடர்பு கொண்டு, அமெரிக்க அதிகாரிகள் மற்றும் அரசியல் மட்டத்தில் அடிக்கப்பபட்ட கமெண்டுகளுக்காக வருத்தம் தெரிவிக்க ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பாக இதுவரை ஆப்கானிஸ்தான், கனடா, சீனா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஜெர்மனி, தென் கொரியா, பிரான்ஸ், இத்தாலி உள்பட 12 நாட்டுத் தலைவர்களிடம் நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் பல நாடுகளின் தலைவர்களுக்கும் அமெரிக்காவின் வருத்தத்தைத் தெரிவித்து, உறவு கெடாமல் பார்த்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஹிலாரி.

0 கருத்துகள்: