தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.10.10

எட்டரை மணிக்கு மேல் என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியும் பால்தாக்கரேவுக்கு ராஜ்தாக்கரே எச்சரிக்கை

மும்பை: ராத்திரி எட்டரை மணி ஆகி விட்டால் என்ன நடக்கும் என்று எங்களுக்கும் தெரியும். அதையெல்லாம் வெளியில் சொல்ல வைத்து விடாதீர்கள். எங்களை தொடர்ந்து சீண்டிக் கொண்டிருக்காமல் எங்களுக்கு மக்கள் [^] தந்திருக்கும் அங்கீகாரத்தை மதிக்க முன்வாருங்கள் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு மகாராஷ்டிர [^] நவ நிர்மான் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளது மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னை வளர்த்து ஆளாக்கிய குருவான பால் தாக்கரேவுக்கு ராஜ் தாக்கரே நேரடியாக விடுத்திருக்கும் முதல் எச்சரிக்கை இது என்பதால் சேனா வட்டாரம் பரபரப்பாகியுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி சிவசேனாவை விட்டு விலகி தனிக் கட்சி கண்டார் ராஜ் தாக்கரே. அன்று முதல் இதுவரை பால் தாக்கரேவை அவர் விமர்சித்து ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை. இந்த நிலையில் முதல் முறையாக பால்தாக்கரேவுக்கு வார்னிங் கொடுத்துள்ளார் ராஜ்.

நேற்று மும்பை [^] யில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் ராஜ் தாக்கரே பேசுகையில், ராத்திரி எட்டரை மணிக்கு என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியும் (இப்படி சொல்லியபடியே தனது கை விரல்களை மது அருந்துவது போல செய்து காட்டினார் ராஜ்). எனவே தொடர்ந்து எங்களை சீண்ட வேண்டாம் என கூறிக் கொள்கிறேன்.

கடந்த காலத்தை தோண்டி எடுக்க ஆரம்பித்தால் நாங்களும் அதேபோல செய்வோம். மக்கள் ஏன் எங்களுக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை பற்றி யோசியுங்கள். நமக்கு ஏன் வாக்களிப்பதில்லை, மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவுக்கு ஏன் வாக்களிக்கிறார்கள் என்று யோசியுங்கள்.

சிவசேனாவின் செயல் தலைவராக உத்தவ் தாக்கரேவை நான்தான் நியமித்தேன் என்று பால்தாக்கரே கூறியிருப்பதில் உண்மை இல்லை. ஒரு வட்டத் தலைவரை நியமிக்கும் அதிகாரத்தைக் கூட எனக்கு பால் தாக்கரே தந்ததில்லை. அப்படி இருக்கையில் கட்சியின் செயல் தலைவரை நியமிப்பது என்பது இயலாத காரியம்.

கட்சியின் செயல் தலைவராக உத்தவ் வர வேண்டும் என விரும்பியவர் பால்தாக்கரேதான். அதற்கு நான் தடையாக இருப்பதாக உணர்ந்தார் அவர். சிவசேனா அவரது சொந்தக் கட்சி, அங்கு நமது கருத்தெல்லாம் எடுபடுமா. இதை உணர்ந்துதான் உத்தவ் பெயரை நான் முன்மொழிய வேண்டுமா என்று அவரிடம் கேட்டேன். மற்றபடி உத்தவை நான் நியமிக்கவில்லை என்றார் ராஜ்.

0 கருத்துகள்: