தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.10.10

அஹ்மது நிஜாத் லெபனானை விட்டு உயிரோடு போக கூடாது : இஸ்ரேல் எம்.பி.

ஜெருசலேம் : ஈரானை கடுமையாக எதிர்க்கும் இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்யேஹ் எல்தாட் இஸ்ரேல் ரேடியோவுக்கு அளித்த நேர்காணலில் லெபனானில் இருக்கும் ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத்தை லெபனானை விட்டு வெளியேறும் முன் எல்லையில் உள்ள வீரர்கள் எப்பாடுபட்டேனும் தங்கள் துப்பாக்கிகளை பயன்படுத்தி கொலை செய்ய வேண்டும் என்று பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லெபனானுக்கு அரச முறை பயணம் மேற்கொண்டுள்ள அஹ்மது நிஜாத் இஸ்ரேலின் எல்லையருகே நடந்த ஹிஸ்புல்லா பேரணியில் கலந்து கொண்டு இஸ்ரேலின் இறுதி காலம் நெருங்கி விட்டது என்று பேசியது இந்நேரம் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இச்சூழலில் இஸ்ரேல் எம்.பி. அஹ்மது நிஜாத்தை கொலை செய்ய வேண்டும் என்றும் அது ஹிட்லரை கொலை செய்வதற்கு ஒப்பானதாகும் என்றும் கூறியுள்ளார். தனக்கு பிடிக்காத உலக தலைவர்களை இஸ்ரேல் கொலை செய்வது புதிதல்ல என்பதும் தன் நலனுக்காக எந்தளவுக்கும் இஸ்ரேல் இறங்கும் என்பதும் அனைவருக்கும் தெரியும் என்றாலும் அஹ்மது நிஜாத் கொலை செய்யப்பட்டால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதால் அம்முடிவுக்கு இஸ்ரேல் செல்லாது என்றே அரசியல் பார்வையாளர்கள் அவதானிக்கின்றனர். சமீபத்தில் கூட பல நாட்டு போலி பாஸ்போர்ட்டுகளை வைத்து துபாயில் ஹமாஸ் தலைவரை கொலை செய்தது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்: