தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.12.10

கும்பகோணத்தில் 40 பாதிரியார்களுடன் டிஎன்டிஜே நடத்திய நேரடி விவாதம்

கடந்த 14-12-2010 செவ்வாய்க் கிழமை அன்று தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தில்கிறிஸ்தவ பாதிரியார்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் குடந்தை மறை வட்டத் தில் உள்ள சுமார் நாற்பது பாதிரியார் கள் கலந்து கொண்டு இஸ்லாம் சம் மந்தப்பட்ட கேள்விகள் கேட்டனர், இதற்கு மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி கேள்விக ளுக்கு பதில் அளித்தார்.

பாதிரியார்கள் பங்கேற்ற கேள்வி – பதில் நிகழ்ச்சி

தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத் தில் இருந்த நமது மாவட்ட நிர்வாகிகளை கடந்த 13-12-2010 அன்று சந்தித்த ஒரு கிறிஸ்தவ சகோதரர் 14.12.10 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11 மணியளவில் குடந்தை மறைவட்ட பாதிரியார்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும், இந்த நிகழ்ச்சி குறித்த ஆலோசனை நடைபெற்ற போது, இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த அறிஞர் ஒருவரை அழைத்து உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன? என்பதனை அறிய ஒரு உரை நிகழ்த்த சொல்ல வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாகவும் அதில் தங்களது அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறீர்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

அதைத்தொடர்ந்து, ஃபாதர் மார்ட்டின் அவர்கள் நமது மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து, குடந்தை மறைவட்ட பாதிரியார்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் தஞ்சை சுற்று வட்டார பகுதியில் சர்ச்சுகளில் பொறுப்பாளராகவுள்ள 40க்கும் மேற்பட்ட பாதிரிமார்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும், அதில் தங்களது அமைப்பு சார்பாக உங்களது மார்க்க அறிஞர் வந்து “உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன?’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்த வேண்டும் என்ற வேண்டுகோளை நேரில் வைத்தார்.

அதற்கு பதிலளித்த நமது தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், நாங்கள் வெறுமனே உரை நிகழ்த்திவிட்டு மட்டும் செல்ல மாட்டோம். இஸ்லாத்திற்கும் கிறிஸ்துவ மார்க்கத்திற்கும் மத்தியில் எண்ணற்ற கருத்து வேறுபாடுகள் உள்ளன; எனவே அவற்றை கேள்விகளாக நாங்கள் எழுப்புவோம். அதற்கு பாதிரிகளாக இருக்கக்கூடிய நீங்கள் பதிலளிக்கவேண்டும்.

அதைப்போன்று உங்களுக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து இருக்கக்கூடிய எத்தகைய குற்றசாட்டுகளையும் கேள்விகளாக நீங்கள் எழுப்பலாம். அதற்கு நாங்கள் பதிலளிப்போம். இந்த நிலைப்பாட் டிற்கு தாங்கள் தயாரா? என்று கேள்வியெ ழுப்ப, தாங்கள் தாராளமாக கேள்விகளை எழுப்பலாம். நாங்களும் கேள்விகளை கேட்கின்றோம், நீங்களும் பதிலளியுங்கள் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

அதைத்தொடர்ந்து, மாநில நிர்வாகத்தை தொடர்புகொண்ட தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகளிடம் இந்த நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல் தாஃபி கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக் கப்பட்டது.

மறுக்கப்பட்ட பொன்னாடை வரவேற்பு:

மாநிலத் தலைவரோடு, தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் இம்தியாஸ், செயலாளர் ராசிக், மற்றும் சுவாமிமலை ஜாஃபர் ஆகி யோர் நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றனர். கும்பகோணம் காமராஜர் சாலையில் அமைந் துள்ள தூய மரியன்னை பேராலய வளாகத் தில் 14-12-2010 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது. நிகழ்ச்சியில் தஞ்சை சுற்றுவட்டார பகுதியில் சர்ச்சுகளில் பொறுப்பாளராகவுள்ள 40க்கும் மேற்பட்ட பாதிரிமார்கள் குழுமியிருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பொறுப்பாளராகவுள்ள ஃபாதர் பீட்டர் பிரான்சிஸ் அவர்கள் முதலில் நமது அழைப்பை ஏற்றுவந்துள்ள பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்படும் என்று அறிவிப்பு செய்தார். அவர் அறிவிப்பு செய்தவுடனேயே இது எங்களது மார்க்க நெறிமுறைகளுக்கு எதிரானது, எனவே இத்தகைய பொன்னாடை களை நாங்கள் ஏற்பதில்லை என்று கூறியவுடன் அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த உரை:

அதைத்தொடர்ந்து, மாநிலத்தலைவர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர் கள், உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி னார்.

உரைக்கு முன்னால், கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் பல்வேறு விஷயங்களில் ஒன்றுபட்டு இருப்பதை பட்டியலிட்டார்.

1. நியாயந்தீர்க்கப்படும் நாளை நம்புதல்
2. இறந்த பிறகு பரலோக ராஜ்ஜியம் உண்டு என்பதை நம்புதல்
3. தீர்க்கதரிசிகளுக்கு இறைவனிடத்திலிருந்து வேதம் வருகின்றது என்பதை நம்புதல்
4. ஏசு தந்தையின்றி பிறந்தார் என்பதை நம்புதல்
5. குழந்தை ஏசு பேசினார் என்பதை நம்புதல்

இதுபோன்ற நம்பிக்கையில் நாம் ஒன்று பட்டு இருந்தாலும், ஏசுவை நீங்கள் இறைவனுடைய மகன் என்று சொல்கின்றீர்கள், அவரை வணங்குகின்றீர்கள், கடவுள் மூன்று என்று கூறுகின்றீர்கள் இதுபோன்ற பல விஷயங்களில் முரண்பாடுகளும் இருக்கின்றன.

எனவே நமக்குள் இருக்கும் முரண்பாடுகளை களையும் விதமாக கிறிஸ்தவ பாதிரிமார்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றாக அமர்ந்து நமக்கு மத்தியில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களையும் விதமாக ஒரு முழு அளவிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அப்போதுதான் உங்களுக்கும், எங்களுக்கும் மத்தியில் இருக்கும் கருத்து வேறு பாடுகள் நீங்கி கருத்தொற்றுமை ஏற்படும்.

எனவே இதுபோன்றதொரு கலந்துரையாடல் காலத்தின் கட்டாயம் என்பதையும் அந்த கலந்துரையாடலுக்கு நாங்கள் தயாராக இருப்பதாகவும் தனது கருத்தையும் வேண்டு கோலையும் முன்வைத்துவிட்டு தனது உரையை ஆரம்பித்தார்.

உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன?

அல்தாஃபி அவர்கள் தனது உரையில் உலகில் அமைதி நிலவ வேண்டும் என்றால் தீவிரவாத செயல்கள் குறைய வேண்டும். நாடு பிடிக்க வேண்டும், அடுத்தவர்களுடைய பொருளாதாரத்தை சுரண்ட வேண்டும், அடுத்த நாடுகளுடைய வளத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில கிறிஸ்தவ நாடுகள் தங்களது தீவிரவாதத்தை கட்ட விழ்த்து விடுகின்றன.

இந்த தீவிரவாத செயல்கள் ஒழிக்கப்பட்டாலே உலக நாடுகளில் நடைபெற்று வரும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட தீவிரவாத செயல்கள் அழித்தொழிக்கப்பட்டு உலகத்தில் அமைதி நிலவும். இதை இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களது இறுதிப் பேருரையில், அடுத்தவருடைய மானம், மரியாதை, பொருள் மற்றவருக்கு ஹராம் (அதா வது தடுக்கப்பட்டது) என்று கூறிச் சென்றுள்ளார்கள்.
ஒருவருடைய மானம், மரியாதை, பொருள், உடைமைகள் அனைத்தும் புனித மானவை. அந்த புனிதம் பேணப்பட வேண்டும் என்றும், இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே, இந்த நிலைப்பாட்டை ஒவ்வொரு நாடுகளும் மேற்கொண்டாலே, இந்த அறிவுரையை ஒவ்வொரு நாடுகளும் கடை பிடித்தாலே உலகத்தில் அமைதி நிலவும் என்று அழுத்தமாக இஸ்லாத்தின் நிலைப் பாட்டை பதிய வைத்தார்.

பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம்:

நிலைமை இவ்வாறிருக்க கிறிஸ்தவ நாடுகளோ தாங்கள் செய்யும் தீவிரவாத செயல்களை மறைத்துவிட்டு, தாங்கள் எந்த நாடுகளின் மீது ஆக்கிரமிப்பு நடத்துகின்றார்களோ, எந்த நாட்டின் வளத்தை சுரண்டுவதற்காக அவர்கள் மீது போர் தொடுக்கின்றார்களோ அந்த அப்பாவி நாட்டுமக்கள் இவர்களை எதிர்த்து ஆயுதம் தாங்கினால் தாங்கள் செய்த தீவிரவாத செயலை மறைக்க முஸ்லிம்களின் மீது அந்த பழியைப் போட்டுவிட்டு தங்களை சாந்த சொரூபிகளைப் போன்று உலக மக்களுக்கு காட்டிக் கொள்கின்றனர்.

தங்களது தீவிரவாத முகத்தை மறைப்பதற்காக தங்களை சாந்த சொரூபிகளைப்போல வேடமிட்டு இரண்டு வேடம் போட்டு முஸ்லிம்களின் மீது பழிபோடும் செயலை கிறிஸ்தவ உலகம் தான் செய்து வருகின்றது என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக வைத்தார்.

மேலும், உலக நாடுகள் மீது அநியாயமாக போர் தொடுக்கும் கிறிஸ்தவ நாடுகளில் யாரும் தீவிரவாதிகள் என்று கூறுவதில்லை. அதே நேரத்தில் நாடுபிடிக்க வந்த கொள்ளயர்களை நாட்டைவிட்டு விரட்டும் புனித வேலையை செய்பவர்களை தீவிரவாதிகள் என்று மீடியாக்களும் குற்றம் சுமத்தி அபாண் டத்தை வீசுகின்றன என்றும், அதே நேரத்தில் இத்தகைய நிலையை முஸ்லிம்கள் விஷயத்தல் மட்டும்தான் இத்தகையோர் எடுக்கின்றனர் என்றும், அதே நேரத்தில் மாவோயிஸ்ட்டுகள், நக்சலைட்டுகள், விடுதலைப்புலியினர், போன்றோர் போராட்டக்களத்தில் குதிக் கும்போது அவர்களாக தங்களது மதத்தோடு இணைத்து இந்து தீவிரவாதிகள் என்றோ, அல்லது கிறிஸ்தவ நாடுகள் இத்தகைய ஆக்கிரமிப்பை செய்யும்போது கிறிஸ்தவ தீவிரவாதிகள் என்றோ கூறுவதில்லை என்பதையும் வேதனையோடு தனது உரையில் சுட்டிக் காட்டினார்.

அதே நேரத்தில் எதிர்த்து போரிடுபவர்களை மட்டும்தான் தீவிரவாதிகள் என்று கூறும் பழக்கம் இருப்பதாக வைத்துக் கொண்டாலும், வியட்நாம், கௌதமாலா போன்ற கிறிஸ்தவ நாடுகளை அமெரிக்கா ஆக்கிரமிக்கும்போதாவது அவர்களை எதிர்த்து போரிட்ட வியட்நாம், மற்றும் கௌதமாலாவை சேர்ந்த கிறிஸ்தவர்களை கிறிஸ்தவ தீவிரவாதிகள் என்று யாரும் கூறவில்லை என்பதையும் தனது உரையில் பதிய வைத்தார்.

மேலும், நமது இந்திய நாட்டையும் ஆக்கிரமிக்க வந்த கிறிஸ்தவர்களை யாரும், கிறிஸ்தவ தீவிரவாதிகள் என்று கூறவில்லை. அவர் களை எதிர்த்து போரிட்ட இந்துக்கள், மற்றும் முஸ்லிம்களை இந்து தீவிரவாதி என்றோ முஸ்லிம் தீவிரவாதி என்றோ கூறவில்லை என்பதையும் தனது உரையில் சுட்டிக் காட்டி னார்.

ஆக மொத்தத்தில், உலகத்தில் நடக்கும் பெருவாரியான தீவிரவாத செயல்களுக்கு கிறிஸ்தவ நாடுகளே காரணம் என்றும், அவர்கள் தங்களது தீவிரவாத செயல்களை நிறுத்திக் கொண்டால் உலகில் நடைபெறும் தீவிரவாதத்தில் பெருவாரியானவை குறைந்து விடும் என்பதையும் அழுத்தம் திருத்தமாக பதிய வைத்தார்.

அனல்பறந்த கேள்வி – பதில் நிகழ்ச்சி:

கூடியிருந்த கூட்டமோ கிறிஸ்தவத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு, அதை பிரச்சாரம் செய்யும் பாதிரியார் களின் கூட்டம். அங்கு இறைவனது மாபெரும் அருளைக் கொண்டு உண்மைக் கருத்துகளை போட்டு உடைத்தால் பாதிரியார்கள் சும்மா இருப்பார்களா என்ன? குழுமியிருந்த பாதிரியார்கள் ஒவ்வொருவரிடத்திலிருந்தும் கேள்விக்கணைகள் நம்மை நோக்கி பாய்ந்தன.

அவர்களது அத்தனை கேள்விகளுக்கும் அறிவிப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அல்தாஃபி அவர்கள் பதிலளித்தார். இஸ்லாம் மார்க்கம் குறித்த பாதிரிமார்களின் கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்க கேள்வி-பதில் நிகழ்ச்சி அனல் பறந்தது.


ஜனவரி 27 போராட்டம்: தினமணி வேலூர் பதிப்பில் வெளியான பி.ஜே அவர்களின் பேட்டி

ஜனவரி 27 போராட்டம்: தினமணி வேலூர் பதிப்பில் டிசம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதியில் வெளியான பி.ஜே அவர்களின் பேட்டி





தமிழ் கட்சிகளின் அரங்கில் முஸ்லிம் கட்சிகளும் இணைய வேண்டும்- ஹசன் அலி

அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்காக கூட்டு முன்னணி ஒன்றை ஏற்படுத்த தமிழ், முஸ்லீம் அரசியல் கட்சிகள் எண்ணியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நோக்கத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்படுத்திக் கொண்டுள்ள குழுவில் முஸ்லீம் கட்சிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் கட்சிகளின் அரசியல் தீர்வு யோசனையை தயாரிப்பதற்கான கூட்டுக்குழுவின் உறுப்பினருமான சுமந்திரன், அது சிறந்த நடவடிக்கையாக அமையும் என கூறியுள்ளார்.

இந்த யோசனை குறித்து ஆராய கூட்டுக்குழு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் கட்சிகளின் அரங்கம் என்பன இணைந்து அரசியல் தீர்வு தொடர்பான யோசனையை தயாரிப்பதற்காக கூட்டுக் குழுவொன்றை ஏற்படுத்தின

விக்கிலீக்ஸை கண்கானிக்க அமெரிக்க உளவுத்துறை நடவடிக்கை .

விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் குறித்த தகவல்களை கண்காணிப்பதற்கு அமெரிக்க

உளவுத்துறையான சி.ஐ.ஏ நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்கு WikiLeaks Task Force (WTF) என்று பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட ரகசிய ஆவணங்கள் வெளிநாட்டு உறவுகளை எவ்வாறு பாதிக்கின்றது என்பது தொடர்பாக அவர்களின் விசாரணைகள் இருக்குமென்று தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து டிப்பாட்மென்ட்களிலும் இருந்து 10 க்கும் மேற்பட்டோர் அங்கம் வகிக்கும் இந்த குழு சி.ஐ.ஏ யின் Counterintelligence Center இனால் நிர்வகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அமெ‌ரி‌க்கா‌வி‌ல் ‌திவா‌லாகு‌ம் வ‌ங்‌கி‌க‌ளி‌ன் ரக‌சிய‌ங்களை வெ‌ளி‌‌‌யிடுவ‌ே‌ன் என ஜூலியன் அசாஞ்சே மிரட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

21.12.10

சுவாமி அசிமானந்த்துக்கு சம்ஜாதா ரயில் தாக்குதலிலும் தொடர்பு-என்ஐஏ

பன்ச்குலா: ஹைதராபாத்தின் மெக்கா வசூதியில் நடந்த குண்டுவெடிப்பு ச் சம்பவத்தில் தொடர்புடைய சாமியார் அசிமானந்த்துக்கு, 68 பேரைர் பலிகொண்ட சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் தொடர்பு உள்ளதாக தேசிய புலனாய்வு ஏஜென்சியின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மெக்கா மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு குண்டுவெடித்தது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தீவிரவாதிகள் இந்து ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நிலையில் நவம்பர் 19ம் தேதி 59 வயதாகும் அசிமானந்த்தை ஹரித்வாரில் வைத்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மெக்கா மசூதி குண்டுவெடிப்பில் தனக்குள்ள தொடர்பை அவர் ஒத்துக் கொண்டார். மேலும் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பில் உள்ள தொடர்பையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார் என்று தேசிய புலனாய்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் சம்ஜாதா குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து வரும் சிறப்பு கோர்ட்டான பன்ச்குலா கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், சாமியாருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் எங்களுக்கு உள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தனக்கு உள்ள தொடர்பையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ஜனவரி 3ம் தேதி வரை தொடர்ந்து காவலில் வைத்து விசாரிக்க தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு கோர்ட் அனுமதி அளித்தது.

2007ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி நள்ளிரவில் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் சென்று கொண்டிருந்த சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு பெட்டிகளில் குண்டுகள் வெடித்தன. இதில் 68 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானியர்கள். இவர்களில் 38 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். லாகூருக்கு சென்று கொண்டிருந்தவர்கள் இவர்கள்.

மொத்தம் 6 பெட்டிகளில் குண்டுகள் வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த குண்டுகள் லாகூரில் வாங்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் வழக்கில் புதிய திருப்பமாக இந்து சாமியாருக்கு இதில் உள்ள தொடர்பு தற்போது அம்பலமாகியுள்ளது.

மக்கா மஸ்ஜித்:முஸ்லிம் சமுதாயத்திடம் ஆந்திர அரசு மன்னிப்புக் கேட்கும் - ஆந்திர மாநில முதல்வர்

ஹைதரபாத்,டிச.16:கடந்த 2007 ஆம் ஆண்டு ஹைதரபாத் மக்கா மஸ்ஜிதில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து முஸ்லிம் இளைஞர்களை போலீசார் வேண்டுமென்றே கொடுமைப்படுத்தியிருந்தால் அதற்காக முஸ்லிம் சமுதாயத்திடம் மன்னிப்புக்கேட்க ஆந்திர அரசு தயார் என அம்மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி சட்டசபையில் அறிவித்தார்.

மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அக்பருத்தீன் உவைஸி எழுப்பிய கேள்விக்கும் பதிலளிக்கையில் முதல்வர் இதனை தெரிவித்தார்.

போலீஸாரால் கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு பொருளாதார உதவி வழங்கப்படும் எனவும் முதல்வர் உறுதி அளித்தார்.

நிரபராதிகளான முஸ்லிம்களை மட்டுமல்ல, எந்த நபர்களையும் கொடுமைப்படுத்தியிருந்தாலும் அரசுக்கு அதுக்குறித்து கவலை உண்டு. ஆனால் பணியின் ஒருபகுதியாக, சூழ்நிலையின் அடிப்படையில் போலீஸ் எவருக்கெதிராகவும் வழக்கு பதிவுச் செய்யும் என முதல்வர் தெரிவித்தார்.

குண்டுவெடிப்புத் தொடர்பான வழக்குகளில் போலீசார் கல்விக் கற்ற முஸ்லிம் இளைஞர்களை தவறாக சேர்த்துள்ளனர் என உவைஸி சுட்டிக்காட்டினார்.

சி.பி.ஐ விசாரணை நடத்தியிருக்காவிட்டால் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை நடத்தியது ஹிந்துத்துவா சக்திகள்தான் என்பது தெரியாமலேயே போயிருக்கும்.100 முஸ்லிம் இளைஞர்களை நிரபராதிகள் என அறிந்து விடுதலைச் செய்தபிறகும் அவர்கள் வேலை வாய்ப்புகளை இழக்க நேரிட்டதால் எதிர்காலம் இருளடைந்துள்ளது என உவைஸி தெரிவித்தார்.

உவைஸியின் கருத்துக்களை எதிர்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆதரித்தார். சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து நடந்த போலீசாரின் துப்பாக்கிச்சூடு பற்றி விசாரணை நடத்தும் பாஸ்கர ராவ் கமிட்டியின் அறிக்கைக்காக அரசு காத்திருப்பதாக உள்துறை அமைச்சர் பி.ஸபீதா ரெட்டி அறிவித்தார். விசாரணையில் குற்றவாளிகள் என கண்டறியப்படும் போலீசார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

திருக்குர்ஆனுக்கு அவமதிப்பு:போராட்டம் நடத்திய 36 முஸ்லிம் இளைஞர்கள் கைது

மும்பை,டிச.16:மும்பை அந்தேரி சாகினாகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பிரிண்டிங் பிரஸ்ஸை நடத்தி வருகிறார் டபிள்யூ.போஸ்கோ என்பவர். இவர் திருக்குர்ஆன் பிரதியின் மீது வைன் மதுபானத்தை வைத்து அருந்தியுள்ளார்.

திருக்குர்ஆனை இவ்வாறு அவமதித்த தகவல் கிடைத்தும் போலீஸ் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக்கூறி முஸ்லிம் இளைஞர்கள் சாகினாகா போலீஸ் நிலையத்திற்கு முன்னால் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் போலீஸார் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் போலீஸார் மீது முஸ்லிம் இளைஞர்களில் சிலர் கல்வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து 36 முஸ்லிம் இளைஞர்களை போலீசார் கைதுச் செய்துள்ளனர். கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி வரை போலீஸ் கஸ்டடியில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாகினாகா போலீஸ் நிலையம் இதுக்குறித்து கூறுகையில், திருக்குர்ஆனை அவமதித்த சம்பவம் செவ்வாய்கிழமை 5.30க்கு நடந்தது. ஆனால், 8.30 க்கு போலீஸ் போஸ்கோவின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுச்செய்துவிட்டது. ஆனால், யாரோ போஸ்கோவின் மீது போலீஸ் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்ற வதந்தியை பரப்பியதால் மக்கள் போலீஸ் ஸ்டேசன் முன்னால் இரவில் கூடி போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதில் இரண்டு போலீசாருக்கு காயமேற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். இதுவரை அவர்கள் கண்டறியப்படவில்லை.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு வருகைபுரிந்த மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஆரிஃப் நஸீம் கான் அப்பாவிகளை கைதுச் செய்யக்கூடாது என போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் இப்பகுதியின் உலமாக்கள், இமாம்கள், முஸ்லிம் சமுதாயத்தின் மதிப்புமிக்கவர்களை சந்தித்து உண்மையில் என்ன நடந்தது? என்பதைக் குறித்து விளக்குமாறு கேட்டுக்கொண்டார்.

துணைபோலீஸ் கமிஷனரிடம் இவ்வழக்கில் கைதுச் செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்கவும், வெள்ளிக்கிழமை ஆஷூரா தினத்தை மக்கள் அமைதியாக கடைபிடிக்கவும் வழிவகுக்குமாறும் உத்தரவிட்டார்.

20.12.10

யூதர்களுக்கு எதிரான நாஜிக்களைப் போன்றவை ஆர்.எஸ்.எஸும், பாஜகவும்-திக்விஜய் சிங்

டெல்லி: யூதர்களுக்கு எதிராக நாஜிக்கள் எப்படி செயல்பட்டனரோ, அதேபோல முஸ்லீம்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும், பாஜகவும் துவேஷத்துடன் செயல்படுகின்றன என்று மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

கர்கரே மும்பை தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்படுவதற்கு முன்பு தனக்குப் போன் செய்து, இந்து தீவிரவாதிகளால் தனக்கு ஆபத்து இருப்பதாக தகவலை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் திக்விஜய் சிங் என்பது நினைவிருக்கலாம்.

நேற்று நடந்த டெல்லி காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு திக்விஜய் சிங் பேசுகையில், நாஜிக்கள் எப்படி யூதர்களுக்கு எதிராக துவேஷத்துடன் செயல்பட்டனரோ அதேபோலத்தான் இப்போது ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை செயல்படுகின்றன.

இந்தியாவில் தீவிரவாதத்தின் வேர் பதியப்பட்டது 1992ல் அத்வானி நடத்திய ரத யாத்திரையின்போதுதான்1930களில் ஹிட்லரின் நாஜிக் கட்சி யூதர்களை வெறித்தனமாக தாக்கியது. அதேபோல ஆர்எஸ்எஸின் கொள்கையும், முஸ்லீம்களைக் குறி வைத்தே உள்ளது. தேசியவாதம் என்ற பெயரில் முஸ்லீ்ம்களை அழிக்க ஆர்எஸ்எஸ் துடிக்கிறது.

இந்தியாவில் தீவிரவாதத்தின் விதையை விதைத்தவர் அத்வானிதான். அவர் 1992ல் நடத்திய ரத யாத்திரைதான் தீவிரவாதத்தின் வேராகும்.

இந்திய வரலாற்றில் மிகப் பெரிய கரும்புள்ளியாக அமைந்துள்ளது பாபர் மசூதி இடிப்பு சம்பவம்.

அனைத்து முஸ்லீம்களும் தீவிரவாதிகள் இல்லை ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லீம்கள் என்கிறார் அத்வானி. அவர் கூறுவது போலவே, அனைத்து இந்துக்களும் தீவிரவாதிகள் இல்லை, ஆனால் அனைத்து இந்துத் தீவிரவாதிகளும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் என்று நாம் சொல்லலாமா.

சிசு மந்திர் பள்ளிகளில் குழந்தைகளிடம் முஸ்லீம் துவேஷத்தை விதைத்து வருகிறது ஆர்எஸ்எஸ். இது நாட்டுக்குப் பெரும் அபாயமாக உருவெடுத்துள்ளதுஅதிகாரவர்க்கம், காவல்துறை, ஏன் ராணுவத்திலும் கூட ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஊடுறுவியுள்ளனர்.

ஆர்எஸ்எஸ், பாஜகவின் வன்முறை மற்றும் துவேஷக் கொள்கைகள் நாட்டுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. அடுத்த பெரும் சவால்கள், கம்யூனிஸ்டுகளும், பிராந்திய அரசியல் தலைவர்களும் என்றார் திக்விஜய் சிங்.

பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் உள்ள கோவில் இடிப்பு!

பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள சிவன் - பார்வதி கோவில் அக்கட்சித் தலைவர்களின் முடிவை அடுத்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

டில்லியில் உள்ள பா.ஜ.க.வின் தலைமை அலுவலக வளாகத்தில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் சிவன் - பார்வதி கோவில் கட்டப்பட்டது. அந்த அலுவலகத்திற்கு அருகில் உள்ள குடியிருப்புவாசிகள், தம்மால் முடிந்த அளவுக்கு சிறிய தொகையை திரட்டி, அந்த சிறிய கோவிலை கட்டினர். கடந்த 18 ஆண்டுகளாக, அங்கு வழக்கமான வழிபாட்டு நிகழ்ச்சிகளும் திருவிழாக்களும் நடந்து வருகின்றன. இவற்றை அந்த பகுதியில் உள்ள பொதுமக்களே செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அலுவலக வளாகத்திற்குள் பொதுமக்கள் கோவிலில் வழிபாடு செய்ய வருவதை, பா.ஜ.க.வினருக்கு இடைஞ்சலாக இருப்பதால், அந்தக் கோவிலை அகற்றி, காம்பவுண்டுக்கு வெளியே கட்டிக்கொள்ளுமாறு அந்தப் பகுதி மக்களிடம் கூறியுள்ளனர். இது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் எங்கேனும் ஓரு மூலையில், நடைபாதையில் உள்ள இந்து கோவில் இடிக்கப்பட்டால் கூட அதற்காக பாஜகவினர் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர். ஆனால், தங்களது அலுவலக வளாகத்திற்குள் உள்ள இந்து கோவிலையே அவர்கள் இடிக்க வேண்டும் என்று கூறியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் கூறியுள்ளனர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட 1992ஆம் ஆண்டுதான் இந்தக் கோவில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோவிலை கட்டுவதற்கு முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் கார் டிரைவராக இருந்த ஒரு முஸ்லிமும் உதவி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது
.

அஜ்மீர், மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு & ஆர்.எஸ்.எஸ். அமைப்பு: ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.

புதுடெல்லி,டிச.19:அஜ்மீர் தர்கா, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரியான சுனில் ஜோஷியை கொலைச்செய்தது அவரது ஆர்.எஸ்.எஸ் கூட்டாளிகள்தான் என மத்திய பிரதேச மாநில போலீஸ் தெரிவித்துள்ளது.ராஜஸ்தான் ஏ.டி.எஸ் கைதுச்செய்த குண்டுவெடிப்புடன் தொடர்புடைய ஹர்ஷத் பாய் சோலங்கிதான் இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளான்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் அப்ரூவராக மாற சுனில் ஜோஷி திட்டமிட்டிருந்த காரணத்தினால் கொலைச் செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸ் கருதுகிறது. ஆனால், ஜோஷி தன்னை தனிப்பட்ட ரீதியில் அவமதித்ததற்காகத்தான் இந்த கொலை நடந்தது என சோலங்கி வாக்குமூலம் அளித்துள்ளான். கடந்த இரண்டு வாரமாக சோலங்கி போலீஸ் காவலில் உள்ளான். சோலாங்கியுடன் அவனது இரண்டு கூட்டாளிகளான ஆனந்த் கட்டாரியா, வசுதேவ் பார்மர் ஆகியோரையும் போலீஸ் கைதுச் செய்துள்ளது.

ஹிந்துத்துவா தீவிரவாதிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களும், காணாமல் போன மொபைல் ஃபோன்களும் கைப்பற்றப்பட்டன. கொலைக்கு பிறகு குற்றவாளிகள் குஜராத்தின் பல பகுதிகளிலும் தலைமறைவாக இருந்ததாக போலீஸ் கூறுகிறது.கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபரில் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. 2007 டிசம்பரில் சுனில் ஜோஷி கொல்லப்படுகிறார். அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பை நிகழ்த்திய பிறகு திவாஸ் மாவட்டத்தின் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள சுனா கடனில் வசித்துவந்தார் ஜோஷி.

ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து வீட்டிலிருந்து வெளியே வந்த சில நிமிடங்களுக்குள்ளாகவே துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போனார். சுனில் ஜோஷி கொல்லப்படுவதற்கு முன்பு அவரை அழைத்தது சோலங்கி என்பது தொலைபேசி அழைப்புகளை பரிசோதித்தபோது தெரியவந்தது. சோலங்கிதான் சுனில் ஜோஷியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். கட்டாரியா, பார்மர், மோஹன், மெஹுல் ஆகியோர் சோலங்கிக்கு உதவியுள்ளனர்.

கைதுச் செய்யப்பட்ட ஆனந்த இந்தூரைச் சார்ந்தவராவார். பார்மர் திவாஸ் மாவட்டத்தைச் சார்ந்தவர். குஜராத்தைச் சார்ந்த மோஹன், மெஹுல் ஆகியோர் உட்பட ஐந்துபேர் தலைமறைவாக உள்ளனர். அஜ்மீர் குண்டுவெடிப்புடன் புனே, பெஸ்ட் பேக்கரி வழக்குகளிலும் குற்றவாளியான சோலங்கி குஜராத்தைச் சார்ந்தவனாவான். மேலும் குற்றவாளிகளை கைதுச் செய்வதற்காக போலீஸ் தேடுதல் வேட்டை நடத்திவருகிறது.

கொலைக்காக பயன்படுத்திய மாருதி வேனும், ஆயுதங்களும் கண்டெடுக்கப்படவில்லை. கொல்லப்பட்ட சுனில் ஜோஷி உள்ளூர் காங்கிரஸ் தலைவரை கொலைச்செய்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாவார். கட்சி வட்டாரங்களில் குருஜி என்றழைக்கப்படும் இவன் ராகுல், மோகன், மெஹுல், ஜயந்தி உஸ்தாத் ஆகிய போலி பெயர்களில் செயல்பட்டுள்ளான்.
இரண்டு வாரங்களுக்கு முன்பாக கைதுச் செய்யப்பட்ட சோலங்கியை ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸிடம் ஒப்படைத்த பிறகு மத்திய பிரதேச மாநில போலீஸ் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

எல்லா தீவிரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு: விசாரணை தேவை?

தீவிரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ்., அதன் சகோதர அமைப்புகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் சுமார் 15 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ள 2 நாள் மாநாடு புது தில்லியின் புறநகர்ப் பகுதியான புராரியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இந்த மாநாட்டின் தலைமை உரையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:

வகுப்புவாத செயல்களிலும், தீவிரவாத செயல்களிலும் ஈடுபட்டுவரும் அமைப்புகள் பெரும்பான்மைச் சமூகமா அல்லது சிறுபான்மைச் சமூகமா என காங்கிரஸ் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் அமைப்பு எந்த மதத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் அது அபாயகரமானது. அத்தகைய சக்திகள் அனைத்தும் தோற்கடிக்கப்பட வேண்டும். வகுப்புவாதம் எந்த உருவத்தில் வந்தாலும் அதை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. குறுகிய அரசியல் லாபங்களுக்காக வகுப்புவாதச் செயல்களில் ஈடுபடுவதும், வெறுப்புணர்வைப் பரப்புவதும், மதவெறியைத் தூண்டுவதும் மதத்தை அவமதிக்கும் செயலாகும்.

மதத்தை கேடயமாகப் பயன்படுத்தி மக்களை வன்முறையில் ஈடுபடத் தூண்டுவது, மற்ற மதங்களைப் பற்றி அவதூறுப் பிரசாரம் செய்வது, வரலாற்றைத் திரித்து மக்கள் மனங்களில் கேடு விளைவிக்கும் தனிநபர்கள், அமைப்புகள், கொள்கைகளை புறந்தள்ள முடியாது.
ஊழலைக் களைய 5 அம்சத் திட்டம்: ஊழல் ஒரு நோய் போல சமூகத்தின் எல்லாநிலைகளிலும் பரவியுள்ளது. அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகள் உள்பட அனைத்து வழக்குகளும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விரைவாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நிரபராதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

2-வதாக, வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்கு அரசே நிதி அளிக்க வேண்டும்.

ஊழலுக்கு மிக முக்கிய ஊற்றாக விளங்குவது நில ஒதுக்கீடு செய்வதற்கு உள்ள அதிகாரம். இத்தகைய அதிகாரத்தை எல்லா முதல்வர்களும், அமைச்சர்களும் கைவிட வேண்டும்.
மாநில அரசுகள் கொள்முதல் செய்யும் அனைத்தும் வெளிப்படையாக நடைபெறுவதற்கான தெளிவான வரைமுறைகள் வகுக்கப்பட வேண்டும். இயற்கை வளங்களை சுரண்டுவதைத் தடுக்க தகுந்த வெளிப்படையான நடைமுறை உருவாக்கப்பட வேண்டும். தங்களது நேர்மை மீது எந்தவிதமான சந்தேகத்தின் நிழலும் விழாதவகையில் காங்கிரஸ் நிர்வாகிகள் செயல்பட வேண்டும். எளிமை, பொறுமை, சிக்கனம் போன்றவையே நமது தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமுறையாக இருக்க வேண்டும். இதை நாம் சட்டமாகக் கொண்டு வரமுடியாது. வறுமை நிறைந்திருக்கும் நாட்டில், நமது வளத்தை கூச்சமில்லாமல் வெளிப்படுத்துவதைத் தவிர்க்கும் சமூக உணர்வு நமக்கு இருக்க வேண்டும்.

பா.ஜ.க.வுக்கு சவால்: எந்தவிதமான குற்றச்சாட்டும் உறுதி செய்யப்படாத நிலையிலும், விசாரணை மட்டுமே நடைபெறும் நிலையிலும் நமது முதல்வர்கள், அமைச்சர்களை பதவி விலக ஆணையிட்டுள்ளோம். இதுபோன்று எத்தனைக் கட்சிகள் உரிமை கோர இயலும்? கர்நாடகத்தில் ஊழல் புகார் எழுந்துள்ள நிலையில், முதல்வரையோ, அமைச்சர்களையோ பாரதிய ஜனதா கட்சியால் விலகச் சொல்ல முடியுமா? நாடாளுமன்ற முடக்கம் குறித்து...: நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கியதற்கு எப்படி நியாயம் கற்பிக்கப் போகின்றன? அரசியல் காரணங்களுக்காக நாடாளுமன்றத்தை பிணைக் கைதியாக எதிர்க்கட்சிகள் பயன்படுத்தக் கூடாது. மிக முக்கியமான பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும், முடிவு எடுக்கவும் நாடாளுமன்றமே மிகச் சரியான இடமாகு
ம்

19.12.10

ஷார்ஜாவில் 17 இந்தியர்களுக்கு தூக்கு ?


துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் அருகே உள்ள ஷார்ஜாவில் 17 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

ஷார்ஜாவில் உள்ள ஒரு தொழிலாளர்கள் விடுதியில் (Labourers camp) இந்திய மற்றும் பாகிஸ்தானி தொழிலாளர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட சிறு கைகலப்பு மோதலாய் மாறி மிஸ்ரி நஸீர் கான் எனும் பாகிஸ்தானியர் ஜனவரி 2009ல் கொல்லப்பட்டார்.

அது சம்பந்தமான வழக்கில் 17 இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. நீதிமன்றம் கேட்டு கொண்டதற்கிணங்க கொலை இவ்வாறு நடந்திருக்க கூடும் என்று விவரித்து காட்டும் சிடியை காவல்துறை ஒப்படைத்தது. ஆனால் காவல்துறை ஆஜராகதாதல் அவர்களை குறுக்கு விசாரணை செய்ய முடியவில்லை என்றும் அதனால் வழக்கு குறுக்கு விசாரணைக்காக வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடும் வக்கீல் பிந்து சுரேஷ் செத்தூர் கூறினார். குறுக்கு விசாரணை முடிந்து அன்றே தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கள் உயிர் உள்ளவரை இஸ்ரேலை ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டோம் - ஹஸன் நஸ்ருல்லாஹ் சூளுரை


லெபனான்,டிச.18:"நாங்கள் உயிருடன் இருக்கும்வரை இஸ்ரேலை ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டோம். மேலும் ஃபலஸ்தீனின் ஒரு இஞ்ச் நிலத்தைக்கூட விட்டுக் கொடுக்கமாட்டோம்" என லெபனான் ஹிஸ்புல்லாஹ் போராளி இயக்கத்தின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் தெரிவித்துள்ளார்.

முஹர்ரம் 10வது நாள் ஆஷூரா மற்றும் இமாம் ஹுஸைன்(ரலி...) அவர்களின் உயிர் தியாக நினைவு தினத்தில் ஆயிரக்கணக்கான லெபனான் மக்களிடையே ஹஸன் நஸ்ருல்லாஹ் உரை நிகழ்த்தினார்.

ஃபலஸ்தீன் மக்கள் தங்கள் உரிமையை கோருவதை கைவிட்டுவிடுமாறு கூற எவருக்கும் உரிமையில்லை. நாங்கள் எல்லா விஷயத்திலும் ஃபலஸ்தீன் மக்களுக்கு உறுதுணையாக இருப்போம். அரப் லீக்கின் மேற்பார்வையில் இஸ்ரேல் மற்றும் ஃபலஸ்தீன் ஆணையத்திற்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தை காலத்தை விரயமாக்குவதாகும்.

இஸ்ரேல் கடலோரப் பகுதியில் 2007 ஆம் ஆண்டு ஏற்படுத்திய தடையை நீக்கவேண்டும். 15 லட்சம் காஸ்ஸா மக்கள் வறுமையால் வாடுகின்றனர். மத்திய கிழக்கின் மோதலை தீர்க்க ஒரே வழி எதிர்த்துப் போராடுவதுதான். இவ்வாறு நஸ்ருல்லாஹ் உரையாற்றியுள்ளார்

அஜ்மீர், மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சுனில் ஜோஷியை கொன்றது ஆர்.எஸ்.எஸ் - அதிர்ச்சி தகவல்


புதுடெல்லி,டிச.19:அஜ்மீர் தர்கா, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரியான சுனில் ஜோஷியை கொலைச்செய்தது அவரது ஆர்.எஸ்.எஸ் கூட்டாளிகள்தான் என மத்திய பிரதேச மாநில போலீஸ் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் ஏ.டி.எஸ் கைதுச்செய்த குண்டுவெடிப்புடன் தொடர்புடைய ஹர்ஷத் பாய் சோலங்கிதான் இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளான்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் அப்ரூவராக மாற சுனில் ஜோஷி திட்டமிட்டிருந்த காரணத்தினால் கொலைச் செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸ் கருதுகிறது. ஆனால், ஜோஷி தன்னை தனிப்பட்ட ரீதியில் அவமதித்ததற்காகத்தான் இந்த கொலை நடந்தது என சோலங்கி வாக்குமூலம் அளித்துள்ளான்.

கடந்த இரண்டு வாரமாக சோலங்கி போலீஸ் காவலில் உள்ளான். சோலாங்கியுடன் அவனது இரண்டு கூட்டாளிகளான ஆனந்த் கட்டாரியா, வசுதேவ் பார்மர் ஆகியோரையும் போலீஸ் கைதுச் செய்துள்ளது.

ஹிந்துத்துவா தீவிரவாதிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களும், காணாமல் போன மொபைல் ஃபோன்களும் கைப்பற்றப்பட்டன. கொலைக்கு பிறகு குற்றவாளிகள் குஜராத்தின் பல பகுதிகளிலும் தலைமறைவாக இருந்ததாக போலீஸ் கூறுகிறது.

கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபரில் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. 2007 டிசம்பரில் சுனில் ஜோஷி கொல்லப்படுகிறார். அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பை நிகழ்த்திய பிறகு திவாஸ் மாவட்டத்தின் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள சுனா கடனில் வசித்துவந்தார் ஜோஷி.

ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து வீட்டிலிருந்து வெளியே வந்த சில நிமிடங்களுக்குள்ளாகவே துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போனார். சுனில் ஜோஷி கொல்லப்படுவதற்கு முன்பு அவரை அழைத்தது சோலங்கி என்பது தொலைபேசி அழைப்புகளை பரிசோதித்தபோது தெரியவந்தது. சோலங்கிதான் சுனில் ஜோஷியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். கட்டாரியா, பார்மர், மோஹன், மெஹுல் ஆகியோர் சோலங்கிக்கு உதவியுள்ளனர்.

கைதுச் செய்யப்பட்ட ஆனந்த இந்தூரைச் சார்ந்தவராவார். பார்மர் திவாஸ் மாவட்டத்தைச் சார்ந்தவர். குஜராத்தைச் சார்ந்த மோஹன், மெஹுல் ஆகியோர் உட்பட ஐந்துபேர் தலைமறைவாக உள்ளனர்.

அஜ்மீர் குண்டுவெடிப்புடன் புனே, பெஸ்ட் பேக்கரி வழக்குகளிலும் குற்றவாளியான சோலங்கி குஜராத்தைச் சார்ந்தவனாவான். மேலும் குற்றவாளிகளை கைதுச் செய்வதற்காக போலீஸ் தேடுதல் வேட்டை நடத்திவருகிறது.

கொலைக்காக பயன்படுத்திய மாருதி வேனும், ஆயுதங்களும் கண்டெடுக்கப்படவில்லை. கொல்லப்பட்ட சுனில் ஜோஷி உள்ளூர் காங்கிரஸ் தலைவரை கொலைச்செய்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாவார். கட்சி வட்டாரங்களில் குருஜி என்றழைக்கப்படும் இவன் ராகுல், மோகன், மெஹுல், ஜயந்தி உஸ்தாத் ஆகிய போலி பெயர்களில் செயல்பட்டுள்ளான்.

இரண்டு வாரங்களுக்கு முன்பாக கைதுச் செய்யப்பட்ட சோலங்கியை ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸிடம் ஒப்படைத்த பிறகு மத்திய பிரதேச மாநில போலீஸ் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளித
ழ்

பயங்கரவாதத்தை விரும்பாதவர்கள் இந்திய முஸ்லிம்கள் - விக்கிலீக்ஸ்


விக்கிலீக்ஸ்,டிச.19:இந்தியாவில் வாழும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை விரும்பபில்லை என்றும், அவர்கள் தேசியத்திலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள் எனவும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்காவின் ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கத் தூதரகங்கள் தங்களது தலைமையிடத்துக்கு அனுப்பிய பல்வேறு ரகசிய அரசுமுறை ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் டேவிட் முல்ஃபோர்டு அனுப்பிய செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது.

பிரிவினைவாதமும் மதத் தீவிரவாதமும் இந்திய முஸ்லிம்களிடையே பரவலான ஆதரவைப் பெறவில்லை எனவும் பெரும்பாலான முஸ்லிம்கள் மிதவாதக் கொள்கைகளில் பிடிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் எனவும் டேவிட் முல்ஃபோர்டு அந்த ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சி, வலுவான ஜனநாயகம், பல்வேறு பண்பாடுகளையும் உள்ளடக்கிய தன்மை போன்றவை காரணமாக சமூகத்துடன் இணைந்து வாழ்வதையே இந்திய முஸ்லிம்கள் விரும்புவதாகவும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் மற்ற சமூகத்துடன் கலந்துவிட விரும்புவதால், பயங்கரவாதத் செயல்களுக்கு ஆளெடுப்பது மிகமிகக் குறைந்துவிட்டதாகவும் அந்த ஆவணம் கூறுகிறது.

இந்தியாவின் மிக உயர்ந்த குடியரசுத் தலைவர் பதவியை முஸ்லிம் ஒருவர் வகித்தது, அரசியலில் ஈடுபடவும் பொருளாதார வெற்றி பெறவும் முஸ்லிம் சமூகத்துக்கு உந்துசக்தியாக அமைந்தது எனவும் முல்ஃபோர்டு குறிப்பிட்டுள்ளார். சானியா மிர்சா, ஷாருக்கான் போன்றவர்கள் இந்திய சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திரங்களாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

17.12.10

பள்ளியில் பைபிள் விநியோகம்: பெற்றோர் முற்றுகை

கடலூர் : பண்ருட்டியில் மாணவ, மாணவியருக்கு பைபிள் வழங்கிய இரண்டு பள்ளிகளில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி கஸ்தூரிபாய் தெருவில் உள்ள புனித அன்னாள் நிறுவனத்தின் கீழ் உள்ள முத்தையர் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஜான்டூயி பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு பைபிள் வழங்கப்பட்டது. பைபிள் வழங்கிய மாணவ, மாணவியர் கட்டாயமாக படிக்க வேண்டும் என வற்புறுத்தியதாக இரண்டு பள்ளிகளிலும் 50க்கும் மேற்பட்ட பெற்றோர் முற்றுகையிட்டு பள்ளி தலைமை ஆசிரியர், நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், வரும் 16ம் தேதி இந்து ஆன்மிக பேரவை சார்பில் இரண்டு பள்ளிகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பண்ருட்டி இந்து சமுதாய ஆன்மிக பேரவை தலைவர் கோபாலகிருஷ்ணன், தாசில்தார் பன்னீர்செல்வத்திடம் மனு கொடுத்துள்ளார்.



லஷ்கரைவிட இந்து தீவிரவாத குழுக்களே மிகப்பெரும் அச்சுறுத்தல்: ராகுல் காந்தி


புதுதில்லி, டிச.17: லஷ்கர்- இ- தோய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளைவிட இந்து தீவிரவாதக் குழுக்களின் வளர்ச்சிதான் இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி அமெரிக்கத் தூதரிடம் கூறியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி அமெரிக்க தூதரகத்தின் ரகசிய ஆவணத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் 2009 ஜூலையில் நடந்த விருந்தின்போது இந்தியாவுக்கான அச்சுறுத்தல் குறித்தும், லஷ்கர்-இ-தோய்பாவின் நடவடிக்கைகள் குறித்தும் ராகுல் காந்தியிடம் அமெரிக்க தூதர் திமோதி ரோமர் விசாரித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

அதற்கு ராகுல் காந்தி, இந்திய முஸ்லீம் சமுதாயத்தில் உள்ள சில குழுவினரும் லஷ்கர்-இ-தோய்பாவை ஆதரிப்பதற்கு ஆதாரங்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும் முஸ்லீம் சமுதாயத்தினருடன் மோதலையும், பதற்றத்தையும் உருவாக்கும் இந்து தீவிரவாதக் குழுக்களின் வளர்ச்சி இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கலாம் என ராகுல் காந்தி எச்சரித்ததாக அந்த ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ராகுல் குறித்த விக்கிலீக்ஸ் வெளியீட்டில் சதிச்செயல் இருக்கலாம் என காங்கிரஸ் கட்சி சந்தேகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உண்மையை ஆராய்வோம். இதன் பின்னணியில் சில சதிச்செயல்கள் இருக்கலாம் என அக்கட்சியின் பொதுச்செயலர் ஜனார்தன் திவிவேதி தெரிவித்தார்

ஏமனில் அமெரிக்க தூதரக வாகனத்தின் மீது குண்டுவீச்சு


சனா, டிச.17: ஏமன் தலைநகர் சனாவில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் சென்ற வாகனத்தின் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க மற்றும் ஏமன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளோம். சனாவில் உள்ள ஹட்டா மாவட்டத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் பி.ஜே.குரோலி தெரிவித்தார்

அசாஞ்சேவுக்கு நிபந்தனை ஜாமீன்


லண்டன், டிச.16: விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு நிபந்தனை ஜாமீனை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ராணுவத் தகவல்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இணையதள நிறுவனர் அசாஞ்சே மீது ஸ்வீடன் நாட்டில் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை பிரிட்டிஷ் போலீஸôர் கைது செய்தனர்.

இதையடுத்து அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த பிரிட்டிஷ் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீனை வழங்கியுள்ளது. உத்தரவாதத் தொகையாக அவர் 2.4 லட்சம் பிரிட்டிஷ் பவுண்டுகளை செலுத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் சிறையிலிருந்து விரைவில் ஜாமீனில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

16.12.10

20 ஆண்டுகளில் காஷ்மீறில் கொல்லப்பட்ட தலைவர்கள் 697 பேர்.

ஜம்மு,டிச.13:கடந்த 20 வருடங்களுக்கிடையே கஷ்மீரில் நடந்த மோதலில் 697 அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கொல்லப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சகம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டுதான் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.2002-100 பேர், 2010-4 பேர், 2009-6 பேர், 2007- 9 பேர், 2006-17 பேர், 2005-40 பேர், 2004- 62 பேர், 2003-52 பேர், 2001- 76 பேர், 2000-35 பேர், என புள்ளிவிபரம் கூறுகிறது. தேசிய மாநாட்டுக் கட்சியின் 420 பேரும், பி.டி.பியைச் சார்ந்த 96 பேரும் இதில் உட்படுவர்