மதுரை, மார்ச். 23- மதுரை மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற கல்லூரி மாணவர்களுக்கு, தேர்தல் கமிசன் அழைப்பு விடுத்து உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13-ந் தேதி நடைபெற உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிசன் தீவிரமாக இறங்கி உள்ளது. இந்த நிலையில் தற்போது புதிய உத்தரவாக தமிழ்நாட்டில் முதன் முறையாக கல்லூரி மாணவர்களையும் தேர்தல் பணியில் ஈடுபட தேர்தல் கமிசன் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பதற்றமான வாக்குச்சாவடிகளிலும் லேப்-டாப் கம்ப்யூட்டருடன் இணைந்த கண்காணிப்பு




















