தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.12.12

சிரிய அரசு தோல்வியை தவிர்க்க இயலாது ரஸ்யா கூறுகிறது


கடந்த ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக சிரிய அதிப ர் பஸார் அல் ஆஸாத்துக்கு ஆதரவு வழங்கிவரும் ர ஸ்யா இப்போது மெல்ல மெல்ல தனது பார்வையை மாற்ற ஆரம்பித்துள்ளது.சிரிய அதிபர் ஆஸாத் தன து கட்டுப்பாட்டை நாட்டின் பல மாநிலங்களில் அடி யோடு இழந்துவிட்டார், போராளிகளும் எதிரணியி னரும் வெற்றிபெறும் நாட்களை மேலும் மேலும் பி ன்போட இயலாது என்று ரஸ்ய உதவி வெளிநாட்டு அமைச்சர் மிக்கெயில் புக்டொனாப் தெரிவித்துள்ளா ர்.சதாம் உசேன்,
கடாபி போன்ற உலகத்தின் சர்வாதிகாரிகளுக்கு ஆதரவு போ ல வேடமிட்ட ரஸ்யா அவர்கள் தோல்வியடைந்தவுடன் செத்த நாயில் இருந் து உண்ணி கழன்று ஓடியது போல ஓடியது பழைய கதை.
இப்போது சிரிய அதிபரையும் கைகழுவ ரஸ்யா தயாராவது தெரிகிறது, சிரிய போராளிகள் தலைநகர் டமாஸ்க்கஸ்சை சுற்றி வளைத்த பின்னர் ரஸ்யாவின் இந்தத் தடுமாற்றச் செய்தி வெளியாகியுள்ளது.
அதேவேளை சிரிய அதிபர் ஆஸாத்தின் படைகள் ஸ்குட்மிசைல்சை ஏவ ஆரம்பித்துவிட்டதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே இரசாயன ஆயுதங்களை பாவிக்க வேண்டாம் என்று அமெரிக்காவும், கூடவே ரஸ்யாவும் எச்சரித்திருந்தது தெரிந்ததே.
இன்று நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்தியில் ஆஸாத் நிலை தடுமாறி தடை செய்யப்பட்ட ஆயுதங்களை தூக்கியுள்ள செய்தி வெளியாகியுள்ளது.
தோல்வியின் கடைசி நேரத்தில் அவர் போராளிகளை நோக்கி நச்சுப்புகை அடிக்க வாய்ப்புள்ளது.
வன்னியில் ஆனந்தபுர சண்டையில் தீபன் தலைமையில் வந்த படையினருக்கு மேல் சிறீலங்கா படைகள் நச்சுப்புகை அடிப்பதை சிரியாவை தடுப்பதைப் போல ஐ.நா தடுத்திருந்தால் ஈழத்தின் போரும் திசை மாறியிருக்கும் என்பது தெரிந்ததே.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 40.000 பேரைக் கொன்று, ஐந்து இலட்சம்பேரை அகதிகளாக்கிய சிரியப் போர் முடிவுகட்டத்தை நெருங்குகிறது.
சிரியா குறித்த செய்திகளை எழுதிக் களைத்த ஊடகங்கள் இப்போது முக்கிய திருப்பம் களத்தில் நடந்தாலும் கண்டு கொள்ளாமல் இருப்பதும் அவதானிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

0 கருத்துகள்: