தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.12.12

பொய்த்தது மாயன் காலண்டர். உலகம் முழுவதும் மக்கள் நிம்மதி.


(Crowds of Guatemalan Mayan natives took part in celebrations marking the end of the Mayan age at the Tikal archaeological site, Peten departament, 560 kms north of Guatemala City)மாயன் காலண்டரின்படி உலகம் இன்று 21.12.2012 அழியும் என்று பரவிய வதந்தியால், உலகம் முழுவதும் பரபரப்பு காணப்பட்டது. ஆனால் நேன்று காலை வழக்கம் போலவே மற்றொரு நாளாக விடிந்ததை எண்ணி, உலகமெங்கும் பயத்தில் இருந்த பொதுமக்கள் மனதில் நிம்மதி ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் உலக அழிவில் இருந்து தப்பித்ததற்காக பார்ட்டியும், வழிபாடுகளும் நடத்தப்பட்டன.



(Doomsdayers and prophecy believers have tied the prediction to the extraordinary date of 21.12.12 and are now waiting for 'the end' )

சில நாடுகளில் உலகம் அழிந்தால், பாதுகாப்பாக இருப்பதற்காகவே சில முன்னேற்பாடுகள் செய்து வைக்கபப்ட்டிருந்தன. மாயன் வாழ்ந்ததாக கருதப்படும் Guatemala நகரில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பிரிட்டனில் அந்த நாட்டின் நேரப்படி 11.11 மணிக்கு உலகம் அழியும் என நம்பிக்கொண்டு இருந்தனர். அந்த நேரமும் கடந்துவிட்டதால், மக்கள் மனதில் நிம்மதி ஏற்பட்டுள்ளது.

(Students in Taiwan jump together in front of a mock pyramid after the countdown time when many believe the Mayan people predicted the end of the world)




(In Britain believers think the world will end - or change - at 11:11 GMT)


தைவான் நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் இன்று காலை mock pyramid முன் நின்று துள்ளி குதித்தவாறே உலகம் அழியவில்லை என்பதை சந்தோஷமாக கொண்டாடினர். பிரிட்டனில் உள்ள பள்ளிக்குழந்தைகளும் ஒருவருக்கொருவர் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. 

0 கருத்துகள்: