தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.11.12

வங்காள தேசம் அருகே மியான்மார் அகதிகளின் படகு கவிழ்ந்தது : 130 பேர் மாயம்


மலேசியாவில் தஞ்சம் அடையவென ரோஹிங்கி யா முஸ்லிம் அகதிகளுடன் மியான்மாரில் இருந்து புறப்பட்ட படகு வங்காள தேசத்துக்கு அருகே கடலி ல் மூழ்கியுள்ளது.இவ்விபத்தில் அதில் பயணம் செய் த 130 பேரைக் காணவில்லை என வங்காள தேச போலிசாரும் ரோஹின்கியா முஸ்லிம்களின் அறி வுரையாளர்களும் நேற்று புதன்கிழமை ஊடகங்களு க்குத் தெரிவித்துள்ளனர்.மியான்மாரில் பௌத்த மத பழங்குடியினரின் தொந்தரவில் இருந்து தப்பிப்பதற்
காக அங்குள்ள சிறுபான்மை ரோஹிங்கியா முஸ் லிம்களில் கிட்டத்தட்ட 1
இலட்சம் பேர் வரை இதுவரை அயல் நாடான வங் காள தேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும் அகதிகளை ஏற்க முடியாது வங்காள தேசத்தில் இருந்து கடந்த சில நாட்களாக ஆயிரக் கணக்கான அகதி கள் விரட்டியடிக்கப் படுகின்றனர். இந்நிலையில் மலேசியாவில் தஞ்சம் புகுவ தற்கென 135 பேருடன் சட்ட விரோதமாகப் புறப்பட்ட படகே வங்க தேசம் அரு கே கடலில் மூழ்கியுள்ளது. இதில் 6 பேர் மீன்பிடிப் படகுகள் மூலம் காப்பாற்ற ப் பட்டு காவலில் உள்ளனர்.

இதேவேளை வங்காள தேச கரையோர காவற்படையினரும் இராணுவத்தினரும் மீட்புப் பணிக்கும் கடலில் சடலங்கள் ஏதும் மிதந்து வருகின்றதா எனப் பார்வையிடவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

மியான்மாரில் சொந்த மாநிலம் அற்ற சுமார் 800 000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் உள்ளனர். ஐ.நா சபை இவர்களை உலகில் மிக மோசமாகத் தொந்தரவுக்கு உள்ளாகும் சிறுபான்மையினத்தவர் என விவரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: