தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.11.12

தாஜ் அரேபியா 100 கோடி அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 540 கோடி) மதிப்பில் துபாயில் நவீன தாஜ்மகால்.


உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகாலைப் பிரதியெடுத்தது போன்ற கட்டடம் 100 கோடி அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 540 கோடி) மதிப்பில் துபையில் கட்டப்படவுள்ளது.தாஜ் அரேபியா எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கட்டடம், உண்மையான தாஜ்மகாலைப் போன்று 4 மடங்கு பெரியதாக இருக்கும். 3,650 கோடி அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1.96 லட்சம் கோடி) மதிப்பில் அமைக்கப்படவுள்ள "பால்கன் அற்புத நகர'த்தின்
ஒரு பகுதியாக, 10 லட்சம் சதுர அடி பரப்பளவில் தாஜ் அரேபியா கட்டப்படும். வர்த்தக நோக்கிலான இக்கட்டட வளாகத்தில், 300 அறைகளுடன் ஓட்டல் அமையவுள்ளது.




0 கருத்துகள்: