தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.10.12

ஈரான் மீது பொருளாதார தடையை அமல்படுத்தியுள்ளது முட்டாள் தனமானது. அயதுல்லா காமினி


"ராட்சத தனமான பொருளாதாரத் தடை, எங்கள் நாட்டின் மீது தொடுத்துள்ள யுத்தம். இதை முறியடிப்போம்' என, ஈரான் தலைவர் அயதுல்லா காமினி தெரிவித்துள்ளார்.ஈரான் நாடு, அணு ஆயுதம் தயாரிப்பதாக சந்தேகிக்கும் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள், அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் மற்ற நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் கரன்சி மதிப்பு
40 சதவீதம் சரிந்து விட்டது. இது குறித்து ஈரான் தலைவர் அயதுல்லா காமினி, "டிவி' உரையில் கூறியதாவது: ஈரான் மீது ராட்சத தனமான பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய புரட்சி உருவான 79ம் ஆண்டிலிருந்தே, ஈரான் பொருளாதாரத் தடைக்கு இலக்காகி விட்டது. அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படவில்லை, என பலமுறை மறுத்தும், சந்தேகப்படும் ஐரோப்பிய நாடுகள், நம் நாட்டின் மீது பொருளாதார தடையை அமல்படுத்தியுள்ளது முட்டாள் தனமானது. சொல்லப்போனால், இந்த பொருளாதாரத் தடை, ஈரான் மீது தொடுக்கப்பட்ட போர் தான். இதை நாம் வெற்றி கொள்வோம். இவ்வாறு காமினி கூறினார்.

0 கருத்துகள்: