தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.10.12

துருக்கி மறுபடியும் சிரியாவுக்கு எச்சரிக்கை


சிரியா தொடர்ந்து துருக்கிக்குள் மோட்டார் கிரனை ட் தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்தால் பயங் கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று துரு க்கியின் படைத்துறைத் தலைவர் நக்டாட் ஊசல் எச் சரித்துள்ளார்.கடந்த புதன் சிரிய கிரனைட் விழுந்து ஐந்துபேர் மரணித்த அக்காக்கெலி நகரத்திற்கு விஜ யம் செய்து நிலமைகளை பார்வையிட்ட பின்னர் இந் த எச்சரிக்கையை விடுத்தார்.இது தொடர்தால் பாரிய விளைவுகளை சந்திக்க சிரியா தயாராக வேண்டும் என்று அவர் கூறினாலும் எத்தகைய விளைவுகள் என்று தெரிவிக்கவில்லை.
இது குறித்து நேற்று நேட்டோ செயலர் கூறும்போ து துருக்கியை பாதுகாக்கும் தேவை ஏற்பட்டால் நேட்டோ அதைச் செய்யும் என்று கூறியிருந்தார், அதைத் தொடர்ந்து துருக்கி தளபதி சன்னதமான சவாலை விடுத்துள்ளார்.
மேலும் சிரியா விடயத்தில் ஐ.நாவின் நடவடிக்கைகள் மந்தகதியில் இருப்பதாகவும் நேட்டோ செயலர் ஆனஸ் போ ராஸ்முசன் கூறியுள்ளார்.
துருக்கிக்குள் விழுந்த கிரனைட் ஐந்து பேரைக் கொன்றமைக்கு மன்னிப்புக் கேட்ட சிரியா அதன் பின் தாக்குதலை நிறுத்தவில்லை, அதைத் தொடர்ந்து எல்லைப் புறத்தில் படைகளை நகர்த்தி போராளிகளுடன் மோசமான சண்டையை நடாத்தியது.
ஆனால் வீசப்பட்ட கிரனைட்டுக்கள் சரியான இலக்குகளை குறிவைத்ததாக இல்லை என்பதால் துருக்கியை தூண்டிவிட போராளிகளும் நாசூக்காக செயற்படலாம் என்ற சந்தேகமும் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
எவ்வாறாயினும் நேட்டோ எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முறைப்படி எடுக்கும் என்று துருக்கிக்கு உறுதி வழங்கப்பட்டுள்ளது.
சிரியாவில் இருந்து அகதிகள் வருவதால் இந்த விவகாரம் ஏதோ ஒரு முனையில் தீப்பிடிப்பதை தடுப்பது கடினமாகும்.

0 கருத்துகள்: