தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.10.12

புற்று நோய் தடுப்பிற்கு 100 மில்லியன் குறோணர் சேர்ந்தது


டென்மார்க்கில் புற்றுநோயை தடுப்பதற்கும், அதற் கான ஆய்வுகளை மேற்கொள்ளவும் நிதி திரட்டும் நி கழ்ச்சி தொலைக்காட்சி சேவை 2 ல் நடைபெற்றது. புற்றுநோயை முறிப்போம் என்ற தலைப்புடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் இதுவரை 100 மில்லி யன் குறோணர்கள் திரட்டப்பட்டுள்ளது, புற்றுநோய் எப்படி பரவுகிறது, எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்ப தை கண்டறியும் ஆய்விற்கு இந்த நிதியில் பெரும ளவு பயன்படுத்தப்பட இருக்கிறது.ஒரு தடவை தொ லைபேசி இலக்கத்தை
அழுத்தினால் 150 குறோணர்கள் வசூலிக்கப்பட்டது, பொது மக்கள் மட்டுமல்லாது பல தனியார் நிறுவனங்களும் வாரி வழங்கியுள்ளன.
இந்த நிதி சமீபத்தில் புற்றுநோய்ப்பிரிவு சேகரித்துள்ள சாதனைத் தொகையாகும்.
டென்மார்க்கில் மூவருக்கு ஒருவரை புற்று நோய் தாக்குவதால் புற்றுநோய் தொடர்பான ஆழமான ஆய்வுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
இந்த நிதி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, முன்னர் சுனாமிக்கு தொலைக்காட்சி சேவை 2 சேரித்த நிதி போல இதன் சேகரிப்பு உள்ளது.
பல நாடுகளில் சேகரிக்கப்பட்ட சுனாமி நிதி போனது எங்கே என்ற கேள்வி இன்னமும் காற்றில் கிடக்கிறது.
எனவேதான் உண்மையாக புற்று நோய்ப் பணிக்கு போகும் பணம் எவ்வளவு நிர்வாகத்திற்கு போகும் விரயம் எவ்வளவு என்பதும் அவதானிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
நடன நிகழ்ச்சி ஒன்றை நடாத்தி அதனுடன் இணைத்து இந்த நிதி சேகரிப்பு நடந்தது.

0 கருத்துகள்: