அறுபதுகளில் இஸ்ரேல் – எகிப்து ஆகிய இரு நாடுக ளுக்கிடையேயும் நடைபெற்ற போருக்குப் பின்னர் கேம்ப்டேவிட் உடன்படிக்கை செய்யப்பட்டு அதன் மூலம் இன்றுவரை இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளாமல் அமைதி காக்கப்படுகிறது.கேம்ப் டே விட் ஒப்பந்தம் எழுதிய காலத்தில் இருந்து, கடந்த ஆண்டு எகிப்திய சர்வாதிகாரி கொஸ்னி முபாரக் பத வி இறக்கப்படும்வரை அது அமலில்
இருந்தது.புதி தாக ஆட்சிக்கு வந்த போராளிகள் குழுவும், மக்களும் இணைந்து புதிய நிர்வா கம் ஏற்படுத்தப்பட்டபோது இஸ்ரேல் கலக்கமடைந்தது, எகிப்திய எல்லைப் புறத்தில் காவற்கடமையில் ஈடுபட்டிருந்த ஐந்து போலீசாரை சுட்டுக் கொன்று எகிப்தை ஆழம்பார்த்தது.
இருந்தது.புதி தாக ஆட்சிக்கு வந்த போராளிகள் குழுவும், மக்களும் இணைந்து புதிய நிர்வா கம் ஏற்படுத்தப்பட்டபோது இஸ்ரேல் கலக்கமடைந்தது, எகிப்திய எல்லைப் புறத்தில் காவற்கடமையில் ஈடுபட்டிருந்த ஐந்து போலீசாரை சுட்டுக் கொன்று எகிப்தை ஆழம்பார்த்தது.
இஸ்ரேல் காம்ப்டேவிட் ஒப்பந்தப்படி செய்தது குற்றம் என்று எகிப்து அறிவிக்குமா இல்லையா.. என்றும் நோட்டம் விட்டது, ஆனால் எகிப்தின் புதிய ஆட்சி மௌனமே கடைப்பிடித்து வந்தது.
இப்போது எகிப்தில் தேர்தல் நடைபெற்று புதிய அதிபராக முகமட் மேர்சி பதவிக்கட்டிலுக்கு வந்துவிட்டார்.
இனி என்ன நடக்கும், கேம்டேவிட் ஒப்பந்தத்தின் எதிர்காலம் என்ன..?
அந்த ஒப்பந்தமானது இஸ்ரேல் போரில் வெற்றி பெற்றிருந்த நிலையில் அவர்களுக்கு சாதகமாக எழுதப்பட்டிருந்தது.
பாலஸ்தீனர்களுக்கு எகிப்து உதவ முடியாத அவல நிலையும் அதற்குள் புதைந்து கிடந்தது.
இந்த நிலையில்…
அமெரிக்காவின் வழிகாட்டலுடன் மிகவும் தந்திரமாக தீட்டப்பட்ட கேம் டேவிட் ஒப்பந்தத்தை புதிய அரசு தூக்கி வீச ஆசைப்பட்டாலும், உடனடியாக அம்முயற்சியில் இறங்காமல் அதில் சில மாற்றங்களை செய்ய வேண்டுமெனக் கேட்டுள்ளது.
ஆனால் அதற்கு ஒரே பதில்….
கேம்ப் டேவிட் உடன்படிக்கையில் யாதொரு மாற்றமும் செய்யப்படமாட்டாது என்று நேற்று இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் அவிடோர் லிபர்மான் அழுத்தம் திருத்தமாக கருத்துரைத்துள்ளார்.
இஸ்ரேலின் இரும்பிப்பிடி இன்னமும் எகிப்தின் குரல் வளையை நசித்தபடிதான் இருக்கிறது என்பதை லிபர்மானின் தடித்த குரலால் உணர முடிகிறது.
ஆனால் எகிப்தில் நடைபெற்ற மக்கள் புரட்சி இஸ்ரேலையும், கேம் டேவிட் உடன்படிக்கையையும் தூக்கி வீசவேண்டும் என்ற குறிக்கோளுடனேயே நடைபெற்றுள்ளமை கவனிக்கத்தக்கது.
எகிப்தில் ஜனநாயகம் மலர மலர கேம்டேவிட் குப்பைத் தொட்டியை நோக்கி.. நோக்கி நகரும் என்பதே யதார்த்தமாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக