இளம் பெண்களிடம், தகாத முறையில் நடந்து கொ ண்டதாக குற்றம் சாட்டப்பட்ட சாமியார் பிரகாஷ் ஆனந்த், மெக்சிகோ வழியாக இந்தியாவுக்கு தப்பி யோடியதாக, அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்ற னர்.அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில் உ ள்ள, ஆஸ்டின் நகரில், ஆஸ்ரமம் நடத்தி வந்தவர் பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி,83. இவருடைய ஆஸ்ரம த்தில், பக்தர்கள் சிலர் குடும்பமாக தங்கியிருந்தனர். இந்த குடும்பத்தை சேர்ந்த இரண்டு இளம் பெண்க ளை தனியாக அழைத்து முத்தமிட்டதாகவும், கட்டி தழுவியதாகவும் இவர்
மீதுபுகார் கூறப்பட்டது.பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி மீது கூறப்பட்ட செக்ஸ் புகாரில், டெக்சாஸ் நீதிமன்றம், கடந்த ஆண்டு, அவருக்கு, 14 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. கணிசமான ஜாமின் தொகை கட்டி வெளியே வந்த சாமியார், தலைமறைவாகி விட்டார்.
இந்த சாமியாரின் சீடர்கள் தங்கியுள்ள, பென்சில்வேனியா, டெக்சாஸ், கலிபோர்னியா, புளோரிடா உள்ளிட்ட மாகாணங்களில் போலீசார் தேடி பார்த்து விட்டனர். சக்கர நாற்காலியில் வலம் வரும் பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி, மெக்சிகோ வழியாக, இந்தியாவுக்கு தப்பி சென்று விட்டதாக அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்றனர்.சாமியாரின் சீடர்கள் தான் சாதுரியமாக இவரை தப்பிக்க விட்டுள்ளனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக