தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.9.12

கேஸ் உட்பட எரிபொருட்கள் விலை மீண்டும் உயர்வடைகின்றன?


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர் வடைந்தால் இந்தியாவில் மீண்டும் எரிபொருட்களி ன் விலையை உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமி ட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளும ன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு விலை உயர்வுக் கான அறிவிப்புக்கள் வெளியாகும் எனவும் அதன் ப டி டீசல் விலை ரூ.5 ஆல் உயர்த்தப்படலாம் எனவும், பெட்ரோல் விலை ரூ.4 முதல் ரூ.5 வரை உயர்த்தப் படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கேஸ் சிலி ண்டர் விலை ரூ.74 முதல் ரூ.100 வரையிலும், மண்ணெண்ணெய் விலை லீட் டருக்கு ரூ.2 ஆலும், உயர்த்தபப்ட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பெட்ரோல் விலை அண்மைக்காலமாக பல தடவை உயர்த்தப்பட்டாலும் 2011 ஜூன் மாதத்திற்கு பிறகு சமையல் கேஸ் விலை உயர்த்தப்படவில்லை. எனவே தற்போது விலை உயர்த்தப்படுவது பொதுமக்களிடையே இன்னமும் நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.

பெட்ரோலிய பொருட்களுக்கு மானியம் அளிக்க நிதி அமைச்சகத்திடம் போதுமான நிதி இல்லாததால் மானியத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிகட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்த்தப்படுகிறது.

இவ்வாறு எரிபொருட்கள் விலை உயர்த்தப்படாத பட்சத்தில் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு ரூ.560 கோடியும், கடந்த நிதியாண்டு வரை மொத்தம் ரூ. 1 இலட்சத்தி 92 ஆயிரத்து 951 கோடியும் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்: