தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.8.12

சீனா, பிலிப்பைன்சில் வித்தியாசமான வழக்கம் மலை உச்சியில் தொங்கும் சவ பெட்டிகள்


இறந்தவர்களின் உடலை பெட்டியில் வைத்து மலை உச்சியில் தொங்கவிடும் வித்தியாசமான வழக்கம் சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பின்பற்றப்படுகிறது. மலைஉச்சியில் உடலை வைப்பதால் அவர்கள் இறைவனை நெருங்குகின்றனர். அவர்களது ஆத்மா சாந்தியடைகிறது என்று அப்பகுதியினர் நம்புகிறார்கள். இறந்தவர்களை புதைக்கும் அல்லது எரிக்கும் வழக்கமே

உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது.
ஆனால் சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் சில பகுதிகளில் இறந்தவர்களின் உடலை ஒரு பெட்டியில் வைத்து மலைஉச்சியில் தொங்கவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வித்தியாசமான இந்த பழக்கம் ஒரு சில பிரிவினரால் மட்டுமே பின்பற்றப்படுகிறது. இறந்தவர்கள் இறைவனுக்கு அருகில் இருக்க வேண்டும் என்பதால் இப்படி செய்வதாக கூறப்படுகிறது. இந்தோனேசியா, பிலிப்பைன்சில் சில இடங்களில் இந்த நடைமுறை காணப்பட்டாலும் சீனாவிலேயே இந்த வழக்கம் அதிகம் உள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இம்முறை வழக்கத்தில் இருந்து வருவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

தென்மேற்கு சீனாவின் மடங்க்பா என்ற பகுதியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வசித்த ‘போ’ பிரிவை சேர்ந்த பழங்குடியினர் முதன்முதலில் சவப்பெட்டிகளை மலைப் பகுதிகளில் தொங்கவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை நெருங்கிக் கொண்டிருப்பவர்கள், மரண தருவாயில் இருப்பவர்களை சவப்பெட்டியில் வைத்து மலைஉச்சிக்கு எடுத்துச்சென்று தொங்கவிடுவார்கள் என்று புராதன குறிப்புகளில் உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது புனிதமான செயல். மற்ற மக்களிடம் இருந்து விலக்கி எடுத்து சென்று, மலை உச்சியில் வைப்பதால் அவர்கள் இறைவனை எளிதில் நெருங்குகின்றனர். இறந்த பிறகு, அவர்களது ஆத்மா சாந்தியடைகிறது என்று அவர்கள் நம்புவதாகவும் குறிப்புகள் தெரிவிக்கின்றன. சீனாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் ஒரு சிலர் தற்போதும் இந்த முறையை பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக தீவிர ஆராய்ச்சிகளும் நடந்து வருகிறது.

0 கருத்துகள்: