தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.6.12

நித்யானந்தா சரண் - சிறையில் அடைப்பு!


மதுரை - மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப் பட்ட  நித்யானந்தா தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று அவரது சீடர் ஆர்த்தி ராவ்  புகார் கூடியதை  நித்யானந்தா கூட்டிய பத்திரிக்கையாளர் சந்திப்பு கைகலப்பில் முடிந்தது.அதையடுத்து பிடதி ஆசிரமத்தில் போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினர் மீதும் தாக்குதல் தொடர்ந்த நிலையில் வழக்குப் பதிவு செய்யப் பட்டு நித்யானந்தாவின் சீடர்கள் 17 பேர் கைது செய்யப் பட்டனர். நித்யானந்தாவும் காவல்துறையால் தேடப் பட்டு வந்தார்.பிடதி ஆசிரமத்தில்
சட்ட விரோதச் செயல்கள் நடைபெறுவதாக எழுந்த புகாரை அடுத்து ராமநகர் மாவட்ட ஆட்சியர் கொடுத்த அறிக்கையின் மீது ஆலோசனை நடத்திய கர்நாடக முதல்வர் சதானந்தா கௌடா ஆசிரமத்தை சோதனை செய்து சீல் வைக்கவும் நித்யானந்தாவை உடனே கைது செய்யவும் உத்தரவிட்டார்.

நித்யானந்தாவைக் கைது செய்ய பெங்களூரு நகர காவல்துறை தேடி வந்த நிலையில் நித்யானந்தா சார்பில் அவர் மீது தொடரப் பட்ட வழக்கை எதிர்த்து மனுச் செய்யப் பட்டது. இம்மனு மீதான விசாரணையை ராமநகர நீதிமன்றம் தள்ளி வைத்த நிலையில் காவல்துறை தம்மை எப்படியும் கைது செய்யக் கூடும் என்று அஞ்சிய நித்யானந்தா ராமநகர் நீதிமன்ற நீதிபதி முன்பு சரணடைந்தார்.

சரணடைந்த நித்யானந்தாவை ஒரு நாள் நீதிமன்றக் காவலில் வைக்கவும், மீண்டும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தா பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள நிலையில் அவரைச் சந்திக்க மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் செல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

0 கருத்துகள்: