தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.6.12

குவைத்தில் ராகுல் காந்தி சுற்றுப் பயணம்


அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செய லாளர் ராகுல் காந்தி குவைத் நாட்டில் கடந்த சில நா ள்களாகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.ரா குல் காந்தியின் வருகையின் விபரம் அரசு ரீதியிலா னதா அல்லது தனிப்பட்ட பயணமா என்பது தெரிய வில்லை. என்றாலும் கடந்த செவ்வாய்க் கிழமைய ன்று ராகுல் காந்தி குவைத் நாட்டின் அமீர் (மன்னர்) சேக் சபாஹ் அல் அஹ்மது அல்ஜாபிர் அல் சபா வைச் சந்தித்துப் பேசினார். பின்னர்
குவைத் நாட்டி ன் இளவரசர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களையும் அவர் சந்தித்துப் பேசினார்.

குவைத் நாட்டின் மிகப்பெரும் எண்ணெய் நிறுவனமான குவைத் ஆயில் நிறுவனத்தின் அலுவலகம், குவைத் பல்கலைக் கழகம் போன்றவற்றுக்கும் ராகுல் காந்தி சென்றார்.

வியாழன் அன்று குவைத் நாட்டுக்கான இந்தியத் தூதர் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சியிலும் ராகுல் காந்தி கலந்து கொண்டார். இந்ந நிகழ்ச்சிக்கு குவைத்தில் உள்ள தொழில் அதிபர்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

குவைத்தில்  உள்ள இந்தியன் கம்யூனிட்டி பள்ளிக்கு இடம் ஒதுக்குவது, இந்திய கலாச்சார மையம் அமைக்க நிலம், கோயில் கட்டுவது உள்ளிட்ட குவைத் அரசு தொடர்பான பிரச்சனைகளுக்கு குவைத் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு ராகுல் காந்தியிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து குவைத்தில் உள்ள இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள பயணச் சிரமங்களைக் களைய ராகுல் காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தியிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

பின்னர் பேசிய ராகுல் காந்தி, தாம் சந்தித்த அனைத்து குவைத்திகளும் இந்தியர்கள் குவைத்துக்குச் செய்துள்ள சேவைகளைப் பாராட்டிச் சொன்னதாகக் கூறினார். தம்மிடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராகுல் காந்தி உறுதி கூறினார்.
நன்றி; இன்நேரம்.காம்

0 கருத்துகள்: