தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.6.12

ஆனர்ஸ் பிகார்ஸ் பிறீவிக் ஓர் உளவியல் நோயாளி அல்ல


நோர்வேயில் கடந்த ஆண்டு யூலை மாதம் 77 பே ரை கொலை செய்த குற்றத்திற்கான விசாரணை களை சந்தித்துள்ள ஆனாஸ் பிகார்ஸ் பிறீவிக் வழ க்கு இன்று முக்கியமானதோர் சட்டத்தில் திரும்பிய து.கொலைகளைச் செய்துவிட்டு பைத்தியமாக நாட கமாடும் இவர் ஓர் உளவியல் நோயாளி அல்ல அர சியல் ரீதியான கடும் தீவிரப்போக்காளி என்று நீதிம ன்ற உளவியல் நிபுணர்களாக ரைய ரோரிசன், அக் னா அஸ்பஸ் ஆகிய இருவரும் தெரிவித்தார்கள். சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப அவர் போட்டுள்ள கபட நாடகமே பைத்தியக்கார
வேடமாகும் மற்றப்படி அவர் நல்ல ஆரோக்கி யமான திட்டமிட்டு செயற்படும் ஒருவர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பிறீவிக்கிற்கு சில தனிமனித இடையூறுகளால் வரும் பாதிப்புக்கள் இருந்ததை மறுக்காத உளவியலாளர் அவர் மிகவும் தெளிவான ஒருவர் என்று உறுதிபட தெரிவித்துள்ளனர்.
மேலும் சட்டத்தின் நடைமுறை பற்றிய புரிதல், சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற புரிதல் அவருக்கு போதியதாக இல்லை.
அளவுக்கு மீறியதாக தன் மீது சட்டம் அனுதாபம், இரக்கம் போன்றவற்றைக் காட்டும் என்ற எதிர்பார்ப்பும் அவரிடையே மிகுந்துள்ளது.
மேலும் முதற் தடவை இவரைப்பற்றி வெளியான உளவியல் அறிக்கை யாதொரு ஆதாரங்களும் அற்றது.
அந்த அறிக்கையானது இவர் மோசமாக பாதிக்கப்பட்ட உளவியல் நோயாளி என்று வரையறை செய்திருந்தது.
அதை அடிப்படையாக வைத்து அவர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடவும் முடிவு செய்தார்.
அதன் பின் சுமார் மூன்று வாரங்கள் தம்மால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இவர் உளவியல் நோயாளி அல்ல என்ற முடிவுக்கு தாம் வந்தாக தெரிவித்தார்கள்.
மேலும் திடீரென மனமாற்றமடைந்து இவர் புதிய வன்முறைகளுக்குள் குதித்து இன்னொரு நாடகத்தை ஆடக்கூடிய வழியிருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.
உளவியல் நிபுணர்களின் இந்த வாதத்தை நீதிபதி ஏற்று இவருக்கு சிறைத்தண்டனை விதிப்பாரா அல்லது பழைய அறிக்கையை வைத்து மன்னிப்பளிப்பாரா என்பதே ஆவலைத்தூண்டும் விவகாரமாக உள்ளது.
ஆனால் இரண்டு விதமான உளவியல் அறிக்கைகள் வெளியானதால் இந்த வழக்கில் எத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டாலும் ஒரு விமர்சனம் இருக்கும் என்பது தெரிந்ததே.

0 கருத்துகள்: