தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.6.12

எகிப்து: ஆயுள் தண்டனை பெற்ற முபாரக் மனரீதியில் பாதிப்பு. உடல்நிலை மோசமானது


ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் உடல்நிலை மோசம் அடைந்ததால், சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எகிப்தில் கடந்த 30 ஆண்டுகளாக அதிபராக இருந்தவர் ஹோஸ்னி முபாரக்(84). ஏராளமான ஊழல் புரிந்த இவர் உடனடியாக பதவி விலகக் கோரி, மக்கள் கிளர்ந்தெழுந்தனர். ஓராண்டாக தொடர் போராட்டம் நடத்தினர்.போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை ஏவினார் முபாரக். குண்டு வீச்சு, துப்பாக்கி சூட்டில்

அப்பாவி மக்கள் 800 பேர் கொல்லப்பட்டனர். கடைசியில் பதவி விலகிய முபாரக் குடும்பத்துடன் தப்பி, அருகில் உள்ள தீவில் தஞ்சம் அடைந்தார். பிறகு கெய்ரோ திரும்பினார். இவர் மீதும், இவரது மகன்கள் மீதும் ஊழல் மற்றும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கொலை வழக்கில் முபாரக்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மகன்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கெய்ரோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முபாரக் அதை ஜீரணிக்க முடியாமல் அதிர்ச்சியில் அடிக் கடி மயங்கி விழுந் தார். அவரை சிறை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். அவருக்கு சுவாசத்துக்காக வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள் கூறுகையில், ‘பெரிய பதவியில் இருந்து விட்டு ஆயுள் சிறை என்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால், அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டு உடல்நிலை மோசமடைந்துள்ளது’ என்றனர்.

0 கருத்துகள்: