தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.6.12

எகிப்தின் புதிய ஜனாதிபதி முஸ்லீம் சகோதரத்துவ கட்சி முகம்மது மோர்ஸி


எகிப்து ஜனாதிபதி தேர்தலில் முஸ்லீம் சகோதரத்து வ கட்சியின் வேட்பாளர் முகம்மது மோர்ஸி வெற்றி பெற்றுள்ளார்.முன்னாள் சர்வாதிகார ஆட்சியாளர் ஹோஸ்னி முபாரக் மக்கள் புரட்சியின் காரணமாக பதவியிலிருந்து அகற்றப்பட்டு ஒன்றரை வருடங்க ளுக்கு மேல் கடந்து விட்ட நிலையில் எகிப்து மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசு தலைவ ராக மோர்ஸி அறிவிக்கப்பட்டுள்ளார்.குடியரசு த லைவர் தேர்தலின் முதலாம் சுற்றில் உறுதியான முடிவு கிடைக்காததால்
இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெற்றது. இதில் முபாரக் ஆட்சிக்காலத்தில் இறுதியாக பிரதமராக பதவி வகித்த அகம்மது ஷபீக் அற்றும் முகமது  மோர்ஸி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. தற்போதுள்ள இராணுவ ஆட்சியாளர்களின் அதரவு பெற்ற அகமது ஷபீக்கே இத்தேர்தலில் எப்படியும் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என பொதுமக்கள் எதிர்பார்ஹ்ட்திருந்தனர்.

இந்நிலையில் தேர்தல் முடிவுகளின் படி மோர்ஸிக்கு 51.7% வீத வாக்குகளும், அஹம்மது ஷபீக்கிற்கு 46.7% வீத வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. இதை தொடர்ந்து மோர்ஸி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எனினும் ஜனாதிபதிக்கு இருந்த உயர் அதிகாரங்களை தற்போதுள்ள இராணுவ அரசு குறைத்திருப்பதாலும், எகிப்தின் தற்போதைய அரசியல் சாசனத்தில் மாற்றங்கள் பலவற்றை செய்திருப்பதாலும் ஆட்சியை கைப்பற்றியுள்ள முஸ்லீம் சகோதரத்துவ கட்சியினருக்கு இனிமேல் தான் அதிக சவால்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

80 ஆண்டுகால வரலாற்றை கொண்ட அக்கட்சி, கடந்த வருடம் எகிப்தில் மக்கள் புரட்சி நடைபெற்ற போது பொதுமக்களுக்கு பலத்த ஆதரவு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

60 வயதான மோர்ஸி அமெரிக்காவில் படித்த பொறியியலாளர் ஆவார். முபாரக்கின் ஆட்சிக்காலத்தில் சிறையில் அடைக்கபப்ட்டிருந்தார்.

0 கருத்துகள்: