தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.6.12

மத்தியகிழக்கில் ஸ்திரதன்மைக்கு தடையாய் இருப்பது பாலஸ்தீன் பிரச்சினையே


இஸ்தான்பூல்: "இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் பலஸ்தீன் மக்கள் அனுபவித்துவரும் தொடர்ச்சியான இன்னல்களே மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் ஸ்திரதன்மைக்கு பிரதான தடையாய் அமைந்துள்ளது" என துருக்கியப் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகான் தெரிவித்துள்ளார்.இஸ்தான்பூலில் இடம்பெற்ற சர்வதேசப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அர்தூகான், "மத்தியகிழக்குப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டு இருக்கும் நிலைமையை மாற்ற வேண்டுமானால்,
பலஸ்தீன் பிரச்சினைக்கு நியாயமான ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் சர்வதேச உலகம் அதிகக் கரிசனை காட்டவேண்டும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

"
பலஸ்தீன் சிறுவர்கள், பெண்கள், முதியோர்கள் மீது இஸ்ரேல் இடையறாது குண்டுமழை பொழிந்துவருகிறது. பலஸ்தீன் பொதுமக்களில் அனேகமானோர், உலகிலேயே மிகப்பெரிய சிறைச்சாலையான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலையில் பல்வேறு இன்னல்களை அனுபவித்துவருகின்றனர். இந்த நிலைமை மத்தியகிழக்குப் பிராந்தியமெங்கிலும் பெரும் கோப அலையை எழுப்பியுள்ளது" என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

"
துருக்கி அரசாங்கம் ஜனநாயக அடிப்படையில் நடுநிலையாய்ச் செயற்பட்டுவருவதன் மூலம், இப்பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்தி, உறுதியான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் பெரும் பங்காற்றிவருகின்றது" என்பதையும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 கருத்துகள்: