தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.5.12

ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி பரிசோதகர் ஈரானில் கார் விபத்தில் பலி


ஐ.நா சபையின் அணு சக்தி பரிசோதகர் ஆக் சியோக் ஈரா னில் காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது விபத் துக்குள்ளாகிமரணத்தை தழுவியுள்ளார். தென் கொரிய நா ட்டை பிறப்பிடமாகக் கொண்ட ஆக் சியோக் ஈரான் நாட்டி ன் அணுசக்தி மேம்படுத்தும் நடவடிக்கைகளைக் கண்கா ணிக்கும் ஐ.நா இன் அணுசக்தி ஆய்வுக் குழுவில் முக்கிய பங்கு வகித்திருந்தார்.ஈரானின் மத்தியிலுள்ள மார்காஸி மாகாணத்தில்
அமைந்திருக்கும் கண்டாப் அணு மின் கட்டடத்திற்கு அருகில் பயணத்தை தொடங்கி சில நிமிடங்களில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் சர்வதேச அணு சக்தி ஏஜண்டைச் சேர்ந்தவரும் ஸ்லோவேனியா நாட்டவருமான இன்னுமொரு ஊழியரும் பலியாகியுள்ளார்.
ஈரானின் வீதி விபத்துக்கள் மூலம் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். இதன் மூலம் ஈரானின் பொருளாதாரத்தில் பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் ஐ.நா இன் UNICEF அமைப்பு கூறியுள்ளது. உலகில் வீதி விபத்துக்கள் மூலம் அதிகம் பேர் அதாவது மொத்த இழப்பில் 20% வீதம் ஈரானில் மட்டுமே நிகழ்கின்றது. அதாவது ஒவ்வொரு வருடமும் சராசரியாக 28 000 பேர் வீதி விபத்துக்கள் மூலம் உயிரிழப்பதுடன் கிட்டத்தட்ட 300 000 பேர் காயமுற்றும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: