தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.5.12

அசாஞ்சே நாடுகடத்தப்படுவதை தடுக்க முடியாது : பிரிட்டன்


தன்னை லண்டனுக்கு நாடுகடத்தக்கூடாது என விக் கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அஞ்சாஞ்சே தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை பிரிட்டனின் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனினும் இத்தீர்ப் பை மறுபடி பரிசீலனை செய்வதற்கு 14 நாட்கள் கெடு விதித்துள்ளது.  கடந்த 2010ம் ஆண்டு இரு பெண்களை பாலியல் ரீதியாக பலாத்காரப்படுத்தினார் எனும் குற் றச்சாட்டின் கீழ், ஒருவருடத்திற்கு மேலாக வீட்டுக் காவலில்
வைக்கப்பட்டிருந்தார் அசாஞ்சே. இதில் ஒ ரு சம்பவம் இலண்டனின் ஸ்டொக்
கொல்ம் நகரில் நடைபெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் இவரை நாடுகடத்த இலண்டன் அரசு முடிவு செய்ததை அடுத்து இதற்கு எதிராக பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். எனினும் அதை தற்போது நிராகரித்துள்ள நீதிமன்றம், இவர் மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்கை ஸ்வீடனில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. அசாஞ்சே ஸ்வீடனுக்கு நாடுகடத்தப்பட்டால், அமெரிக்காவினால் சிறைப்படுத்தப்படும் ஆபத்து அசாஞ்சேவுக்கு இருப்பதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் இந்த விவகாரத்தை பொறுப்பெடுத்தால் மாத்திரமே, அசாஞ்சே ஸ்வீடனுக்கு நாடுகடத்தப்படுவது தவிர்க்கப்படும் ஒரே வழியென்கிறார்கள் அரசியல் அவதானிகள்.

அசாஞ்சேவினால் ஆரம்பிக்கப்பட்ட 'விக்கிலீக்ஸ்' இணையத்தளம் செய்திகளை கசிய விடத்தக்க ரகசிய ஓடைகள் மூலம் வல்லரசு நாடுகளின் சர்ச்சைக்குரிய முகமூடிகளைக் கிழித்து அவற்றைத் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: