தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.5.12

ஜாமீன் வாங்கிய ஆ.ராசா!

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லியில் உ ள்ள திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமை ச்சர் ஆ.ராசாவுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம். ரூ. 30 லட்சம் சொந்த உத்தரவாத அடிப்படையில் ஜாமீன் வ ழங்கியது நிதிமன்றம்.2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய தொலை தொடர்பு மந்திரி ஆ.ராசா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி மு தல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் கை தான 12 பேரும் ஜாமீனில் விடுதலையாகி விட்டனர்.தன் னையும் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்
டும் என்று, வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆ.ராசா மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனு மீது கடந்த 11-ந் தேதி நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் விசாரணை நடந்தது.
ஆ.ராசா தரப்பு வக்கீல், சி.பி.ஐ. தரப்பு வக்கீல் ஆகியோரின் வாதங்களை கேட்ட நீதிபதி ஓ.பி.சைனி, இந்த வழக்கில் 15-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவித்தார். ஆகவே,  இன்று ( 15.5.2012) விசாரணை நடந்தது.   விசாரணையின் முடிவில் ஆ.ராசாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டுக்கு நீதிமன்றத்தின் அனுமதியின்றி செல்லக்கூடாது என நிபந்தனையும் விதிக்கப்பட்டது.   மேலும்,  பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவேண்டும் என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டது.   நிபந்தனை யை மீறினால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் நீதிபதி  கூறியுள்ளார்.

0 கருத்துகள்: