தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.4.12

அரச குடும்பத்தை விமர்சித்த குவைத் டி.விக்கு 10 கோடி அபராதம்

முர்காஃப் : குவைத்தை ஆண்டு வரும் அரச குடும்பத்தை வி மர்சித்தமைக்காக குவைத்தில் உள்ள ஸ்கோப் டி.விக்கு கு வைத் நீதிமன்றம் 10 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஸ்கோப் தொலை க்காட்சியில் அதன் நிர்வாக இயக்குநரும் முன்னாள் பாரா ளுமன்ற உறுப்பினருமான தலால் அல் சயீத் ஒளிபரப்பிய நிகழ்ச்சி ஒன்றில் தற்பொழுது குவைத்தை ஆளும் அல் சபா குடும்பத்தின் முன்னோர்களான அல் மலிக் கோத்திரத்தார் குவைத்தை 50 வருடங்களுக்கு முன் குவைத்தை ஆண்ட மன்னர்களை புரட்சி மூலம் பதவியிலிருந்து
தூக்க முயற் சித்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது.அந்நிகழ்ச்சிக்கு பின் அரச குடும்பத்தை சார்ந்தவர்
களால் அத்தொலைக்காட்சி நிலைய தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டதோடு வழக்கும் தொடரப்பட்டது. அலுவலகத்தை சூறையாடிய வழக்கில் அரச குடும்பத்தை சார்ந்த 3 நபர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அரச குடும்பத்தை விமர்சித்த தொலைக்காட்சிக்கு 5 இலட்சம் குவைத் திர்ஹம்கள் (சுமார் 9.5 கோடி இந்திய ரூபாய்) அபாரதம் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

0 கருத்துகள்: