தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.11.11

கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர்கள் முகத்தில் மிளகு ஸ்பிரே அடித்த காவற்துறை


கலிபோர்னியா மாகாணத்தின் டாவிஸ் நகரில் உள்ள கலிபோர்னிய பல்கலைக்கழகமாணவர்கள், வால்ஸ்ட்ரீட் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவராக நடத்திய கவனயீர்ப்பு பேரணியை கலைப்பதற்காக காவற்துறையினர் மிளகு மற்றும் இரசாயன கலவைகள் அடங்கிய திரவத்தை முகத்தில் பீய்ச்சி அடித்தனர். பின்னர் அங்கிருந்து அடித்து அப்புறப்படுத்தி கைது செய்தனர். இது அங்கு கூடியிருந்த மாணவர்கள் மற்றும்
ஊடகவியலாளர்களின் கமெராக்களில் பதிவானது.

இதை தொடர்ந்து காவற்துறையின் இச்செயற்பாட்டுக்கு மாணவர்கள் தரப்பினால் கடும் அதிருப்தி உருவாகியுள்ளது. இணையத்தின் ஊடாகவும், சமூக வலைத்தளங்களின் ஊடாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

இதனால் கடும் கோபமடைந்துள்ள மாணவர்கள், இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அதிபர் லிந்தா கடேஹி பதவி ராஜினாமா செய்ய வேண்டும் என புதிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.

0 கருத்துகள்: