தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.9.11

பலஸ்தீனத்தின் தனிநாட்டு கோரிக்கைக்கு இலங்கை ஆதரவளிக்கத் தீர்மானம்


பலஸ்தீனத்தின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவளிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தக் தகவலை இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் அன்வர் அல் அகா வெளியிட்டுள்ளார்.
பலஸ்தீன இலங்கை நட்புறவு பேரவையின் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிக நீண்ட காலமாக
பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி இந்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில், பலஸ்தீனம் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் அமைப்பு பலஸ்தீனத்தை சுயாதீன நாடாக அங்கீகரிக்க வேண்டுமென பலஸ்தீன பிரதிநிதிகள் கோரிக்கை முன்வைக்கவுள்ளனர். சுமார் 193 நாடுகளில் 124 நாடு கள் ஏற்கனவே தமது கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக உறு தியளித்துள்ளதாகவும் இன்னும் ஐந்து நாடு களின் ஒத்துழைப்பே தேவைப்படுவதாகவும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் தெரி வித்துள்ளார்.
வெளிநாடுகளில் கடமையாற்றிவரும் தமது நாட்டு தூதுவர்கள் ஆதரவு திரட்டும் முனைப் புகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்: