கத்தோலிக்க பாதிரியார்கள் மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் குழு ஒன்று
பாப்பரசர், பதினாறாம் பெனடிக்ட் மற்றும் மூன்று மூத்த கார்டினல்களை விசாரணை செய்ய வேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பபட்டுள்ளது.
இம்முறைகேடு
நடைபெறுவதை தடுப்பதற்கு வத்திகான் தவறிவிட்டதாக நியுயோர்க்கை மையமாக கொண்ட சட்டரீதியான அறப்பணி நிலையமொன்று தெரிவித்துள்ளது. எனினும் இது ஒரு 'பரிகசிக்கத்தக்க விளம்ப உக்தி' என வத்திகான் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.ரோமன் கத்தோலிக்க திருச்சபை சமீபகாலமாக பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளால் தொடர்ச்சியாக விமர்சித்து வரப்படுகிறது. குழந்தைகள் மற்றும், இளைஞர் யுவதிகளுக்கு எதிராக கத்தோலிக்க குருமார்கள் செய்த குற்றங்களை அடிப்படையாக கொண்டு சுமார் 20,000 பக்கங்களுக்கு மேலான ஆதாரபூர்வ அறிக்கை ஒன்றை, அரசியலமைப்பு உரிமைகள் தொடர்பான மத்திய நிலையம் (CCR) சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் அனைத்து குற்றச்சாட்டுக்களும், ரோமையே இறுதியில் கைகாட்டுகின்றன. குறித்த CCR மையம், அமெரிக்கா, ஜேர்மனி, பெல்ஜியம், மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் பாலியல் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட ஆயிரக்கணாகவர்கள் குழந்தைகளாக இருப்பதால், வத்திகானில் மிக உயர்ந்த மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளினால் இச்சம்பவங்கள் மறைக்கபப்ட்டு வருவதாக CCR வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை கத்தோலிக்க திருச்சபையினர் மீதான இக்குற்றச்சாட்டுக்களினால், அவமானவடைவதாகவும், வேதனைப்படுவதாகவும் கூறியுள்ள போப் பெனெடிக்ட், ஊழல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக பொதுவான வழிமுறை ஒன்றை கொண்டுவர உலகெங்கிலும் உள்ள பிஷப்புக்கள் முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக