புதுடெல்லி: மலேகான் வழக்கு உள்ளிட்ட விவகாரங்களில் மஹராஷ்ட்ரா காவல்துறை முஸ்லிம்களிடம் பாரபட்சமாக நடந்துவருவதை உணர்த்துவதற்காக மஹராஷ்ட்ரா பிரதிநிதிகுழு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் மத்திய சட்ட அமைச்சர் ஆகியோரை சந்தித்தது.
முதல்வர் பிரதிவிராஜ் சவானுடன் மாநில அமைச்சர், எம்.எல்.ஏக்க்கள், திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் பட் ஆகியோர் அடங்கிய குழு இரு மத்திய அமைச்சர்களையும் சந்தித்து பேசியது. மாநிலத்திலும், மத்தியிலும் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி புரிந்தபோதும் போலீஸின் அணுகுமுறை பாரபட்சமானது என மாநில முதல்வர்வரே குறிப்பிட்டார்.
ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட மலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக பொய்வழக்கில் கைதுச்செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் வாடும் அப்பாவி நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்யக்கோரித்தான் முதல்வர் பிரதிவிராஜ் சவானுடன் இக்குழு இரு அமைச்சர்களையும் சந்தித்துள்ளது.
மலேகான் வழக்குகளை கையாளும் முறையைக்குறித்து தங்களது கவலையை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளதாக அக்குழுவினர் தெரிவித்தனர். குண்டு வெடிப்பை நடத்தியது ஹிந்துத்துவா சக்திகள் என்பது தெளிவான பிறகும் நிரபராதிகளுக்கு ஜாமீனை மறுத்து வருகிறது மகாராஷ்டிரா போலீஸ். மதத்தின் பெயரால் எவரும் பாரபட்சத்தை சந்திக்கவில்லை என்பதை உறுதிச்செய்ய இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட மத்திய அரசிடம் பிரதிநிதிகுழு வலியுறுத்தியுள்ளது.
சிந்திக்கவும்: மஹராஷ்ட்ரா காவல்துறை முழுவதும் காவிகள் ஊடுருவி விட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது. ஒரு மாநில அரசால் இந்த காவிகளை சந்திக்க முடியாமல் மத்திய அரசின் உதவியை நாடுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்திய ராணுவம், காவல்துறை, நீதி துறை, உளவுத்துறை இவைகளில் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ். இன் உறுபினர்கள் ஊடுருவி விட்டார்கள் என்பதை நம்மால் உணர முடிகிறது.
இவர்கள் பள்ளியில் படிக்கும் போதே அவர்களை ஆர்.எஸ்.எஸ். இன் மாணவர் அமைப்பில் தேர்ந்தெடுத்து பயிற்சிகள் கொடுத்து அவர்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தீவிர உறுபினர்கள் ஆக்குகிறார்கள். அது அப்படியே கல்லூரிகளிலும் தொடர்கிறது. பிற்காலத்தில் அவர்கள் வேலையில் சேர்ந்ததும் தாங்கள் ஹிந்துத்துவா கனவை நினைவாக்க சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள். பெங்களூர் ஐடி துறையில் வேலை செய்யும் இளஞசர்கள் மத்தியிலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் செயல்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நன்றி: சிந்திக்கவும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக