தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.8.11

லண்டன் கலவரம் - பிபிசிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய வீடியோ


உலகின் மிக பழமைவாய்ந்த, சர்வதேச செய்தி சேவைகளில் ஒன்றான பிபிசி, இங்கிலாந்தின்  அரசு சார்புநிலை ஊடகம் என்பது ஒரு விமர்சன கருத்து.
தற்போது லண்டனில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குரொய்டன் நகரில், எழுத்தாளரும், ஒளிபரப்பாளருமான டார்கஸ் ஹோவ் என்பவரை பிபிசி எதேர்ச்சையாக ஒரு பேட்டி கண்டது.

ஓர் கறுப்பினத்தவரான அவர், குறித்த கலவரம் தொடர்பில் லண்டன் காவற்துறையினரையும், அரசையும் கடுமையாக தாக்கி பேசத்தொடங்கினார். கலவரத்தில் வேண்டுமென்றே கறுப்பினத்தவர்கள் குறிவைத்து தாக்கப்படுவதாக கூறினார். இதை சற்றும் எதிர்பாராத பிபிசி ஊடகவியலாளர் அவருடைய பேச்சை நிறுத்த கடும் முயற்சி மேற்கொண்டார்.
ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீங்கள் கண்டனம் தெரிவிப்பதாக கூறவருகிறீர்களா என கேட்டார்? இல்லை என மறுப்பு தெரிவித்த டர்கஸ் இந்த கலவரத்திற்கு காரணம், மார்க் டர்கன் எனும் கறுப்பினத்தவர் பொலிஸாரால் சுட்டுப்படுகொலை செய்ததே என கூறினார். மார்க் டர்கனின் படுகொலைக்கு பொலிஸார் தான் காரணம் என இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை, காவற்துறை அறிக்கை வெளியிடவில்லை. அதற்குள் இப்படி கலவரத்தில் ஈடுபடுவது முறையா? அதற்காக பொதுச்சொத்துக்களை சேதமாக்குவது முறையா என ஊடகவியலாளர் மீண்டும் கேள்வி எழுப்பினார்.

அவருடைய பேரனை பொலிஸார் பல தடவை கைதுசெய்வதற்காக தேடியதாக அவர் பதில் அளித்தார். மேலும் இது கலவரம் அல்ல. மாபெரும் மக்கள் ஒன்றிணைந்து நடத்தும் கிளர்ச்சி. சிரியாவில் நடந்தது. கிலாப்ஹாம்,  லிவர்பூல், ஸ்பெயின், திர்னிடாட் என பல இடங்களில் இது நடந்தது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. இயற்கையாக நடைபெறுகிறது என்றார்.

இறுதியில் பிபிசி ஊடகத்தையும் கடுமையாக தாக்கி பேச முற்படும் போது அவரது பேச்சை இடைநிறுத்திக்கொண்டார் குறித்த பெண் ஊடகவியலாளர்.

இவ்வீடியோ தொகுப்பு யூடியூப்பில் அப்டேட் செய்யப்பட்ட 24 மணிநேரத்தில் 33,000 பேரால் பார்வையிடப்பட்டுள்ளது. பிபிசி, குறித்த நபரின் கருத்துக்களை சுதந்திரமாக பகிர்வதற்கு வாய்ப்பளிக்கவில்லை என இவ்வீடியோ தொடர்பில் கருத்துக்கள் வந்து குவிகின்றன.

ஆர்ப்பாட்டக்காரர்களின் நியாயங்களை எடுத்துரைக்கும் இப்பேட்டியை, இனி ஒரு காலமும் பிபிசி மீள் ஒளிபரப்பு செய்ய விரும்பாது என டுவிட்டரில் ஒருவரின் கருத்து கூறுகிறது.

0 கருத்துகள்: